கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் திடீர் திருப்பம் - காதலி குடும்பத்தின் ‘அந்த’ செயல் !!
கேரளா மாநிலத்தில் தனது காதலனுக்கு ஜூஸில் விஷம் கொடுத்து கொலை செய்த காதலியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரளாவின் பாறசாலை அருகில் உள்ள மூரியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படித்து வந்த இவர், ராமவர்மன்சிறைப் பகுதியைச் சேர்ந்த கிரீஸ்மா என்பவரை காதலித்து வந்தார். கடந்த 14-ம் தேதி காதலியின் வீட்டுக்கு ஷாரோன் சென்றார். அதன்பிறகு வீட்டுக்கு வந்தவர் திடீரென வாந்தி எடுத்து, மயங்கிவிழுந்தார்.
இதனைத் தொடர்ந்து ஜெயராஜ், தனது மகன் ஷாரோனை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து கடந்த 25-ம் தேதி அவர் உயிர் இழந்தார்.அவருக்கு திட்டமிட்டு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவரை காதலித்த க கிரீஷ்மா தான் விஷம் கொடுத்துள்ளார் எனவும் ஷரோனின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். ஏனெனில் தங்களது மகன் அந்த பெண்ணை சந்தித்து விட்டு வரும்போது தான் வாந்தி எடுத்ததாகவும், உடல் நலனுக்காக காதலி கசாயம் கொடுத்ததாக தெரிவித்ததாகவும் அவர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க..தமிழ்நாட்டில் 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடங்கியது.. போலீஸ் பலத்த பாதுகாப்பு !
அந்த புகாரின் பேரில் போலீசார் கிரீஷ்மாவை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பான விசாரணையின் போது, கிரீஷ்மா தற்கொலைக்கு முயன்றதால், அவரை போலீசார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையில் அவரது தாயார் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரை ராமவர்மன் சிறையில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது விஷ பாட்டிலை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து கிரீஷ்மாவை அழைத்து வந்த விசாரணை நடத்த வேண்டும் என்பதால், அந்த வீட்டுக்கு சீல் வைத்துச் சென்றனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கிரீஷ்மாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி னர். தொடர்ந்து அவரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து கிரீஷ்மாவை திருவனந்தபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அழைத்துச் சென்ற போலீசார் அங்கு வைத்து விசாரணை நடத்தினர். மேலும் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று ஷாரோன்ராஜிக்கு விஷம் கொடுத்தது எப்படி? என விசாரணை நடத்த போலீசார் திட்ட மிட்டிருந்தனர்.
இதையும் படிங்க..2022ம் ஆண்டு முடிய 60 நாட்கள் தான் இருக்கு, ஆனா ? மீண்டும் சுனாமி.. நாஸ்டர்டாமஸ் கணிப்பு பகீர்
இந்த சூழலில் நேற்று யாரோ, கிரீஷ்மா வீட்டில் போலீசார் வைத்திருந்த சீலை உடைத்துள்ளனர். இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான தகவல் கிடைத்ததும், பளுகல் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தட யங்கள் சேகரிக்கப்பட்டன. இதற்கிடையில் கேரள குற்றப்பிரிவு போலீசாரும் சம்பவ இடம் வந்து பார்வை யிட்டனர்.
கிரீஷ்மாவை விசாரணைக்கு வீட்டுக்கு அழைத்து வர போலீசார் திட்டமிட்டிருந்த சூழலில், வீட்டில் போலீசார் வைத்த சீல் உடைக்கப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. வீட்டுக்குள் புகுந்து தடயங்களை அழிக்க முயற்சி நடந்திருக்கலாமா ? அவர்கள் யார் ? என்பது மர்மமாக உள்ளது. சம்பவம் தொடர்பாக இடைக்கோடு கிராம நிர்வாக அலுவலர் ஷாலினி கொடுத்த புகாரின் பேரில் பளுகல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க..மாணவிகளுக்கு சைக்கிள்.! பெண்களுக்கு ஸ்கூட்டி.! தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அள்ளிக்கொடுத்த பாஜக !