மாணவிகளுக்கு சைக்கிள்.! பெண்களுக்கு ஸ்கூட்டி.! தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அள்ளிக்கொடுத்த பாஜக !
இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. எனினும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. ஏபிபி நியூஸ், சி - வோட்டர் கருத்துக் கணிப்பின்படி பாஜக 37 முதல் 45 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..கோவை கார் வெடிப்பில் சிக்கிய பென் டிரைவ்.. 100க்கும் மேற்பட்ட ஐஎஸ் அமைப்பு வீடியோக்கள் - பரபரப்பு பின்னணி !
காங்கிரஸுக்கு 21 முதல் 29 தொகுதிகள் கிடைக்கும். ஆம் ஆத்மிக்கு ஓரிடம்கூட கிடைக்காது. இண்டியா டிவி, மேட்ரிஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், ஆளும் பாஜகவுக்கு 41, காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் கிடைக்கும். ஆம் ஆத்மி உள்ளிட்ட இதர கட்சிகள் 3 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. குஜராத்தில் பாஜகவுக்கு 131-139, காங்கிரஸுக்கு 31-39, ஆம் ஆத்மிக்கு 7-15 இடங்களும் கிடைக்கும்.
இதையும் படிங்க..2022ம் ஆண்டு முடிய 60 நாட்கள் தான் இருக்கு, ஆனா ? மீண்டும் சுனாமி.. நாஸ்டர்டாமஸ் கணிப்பு பகீர்
அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பாஜக இமாச்சல பிரதேசத்தின் தேர்தல் அறிக்கையை ஜே.பி நட்டா வெளியிட்டுள்ளார். அதில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும். உயர்கல்விக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இலவசங்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசி வரும் நிலையில் இலவசங்கள் குறித்து பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..தமிழ்நாட்டில் 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடங்கியது.. போலீஸ் பலத்த பாதுகாப்பு !