Price Hike: விலை உயரும் டீ,காபி.. எவ்வளவு தெரியுமா ? அதிர்ச்சியில் பொதுமக்கள் !!

பால் விலை உயர்வு காரணமாக டீ,காபி போன்றவற்றின் விலை தற்போது உயர்ந்துள்ளது.

The prices of tea and coffee have increased due to the rise in milk prices

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நீண்ட நாட்களாக கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

கடந்த வாரம் தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது.

The prices of tea and coffee have increased due to the rise in milk prices

ஆவின் நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 இலட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. கடந்த 19.08.2019 முதல் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.32-ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.41-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க..தமிழ்நாட்டில் 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடங்கியது.. போலீஸ் பலத்த பாதுகாப்பு !

அதேநேரம், நுகர்வோர்களின் நலன் கருதி, கடந்த 16.5.2021 முதல் அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய்.3- குறைக்கப்பட்டது. பால்கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமே பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், பால் நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்வதுமாகும்.

இச்சூழ்நிலையில் இடுபொருட்கள் விலையேற்றம், உற்பத்தி செலவினம் ஆகியவை கூடியுள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் பால்கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி, பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் மூன்று உயர்த்தி, ரூ.32-லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் மூன்று உயர்த்தி. ரூ.41-லிருந்து ரூ.44 ஆகவும் வழங்கப்படும்.

The prices of tea and coffee have increased due to the rise in milk prices

இதையும் படிங்க..மாணவிகளுக்கு சைக்கிள்.! பெண்களுக்கு ஸ்கூட்டி.! தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அள்ளிக்கொடுத்த பாஜக !

நாளை மறுநாள் முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும். இந்த கொள்முதல் விலை உயர்வால், சுமார் 4.20 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக பலனடைவார்கள் என்று அதில் கூறப்பட்டது. தமிழ்நாடு அரசின் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் டீ. காபி போன்றவற்றின் விலை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது பால் விலை, டீத்தூள், காபிதூள், சர்க்கரை போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த் நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள டீக்கடைகளில் டீ, காபி விலையை ரூ.15 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மதுரை மாவட்ட காபி, டீ வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.இதனால் விரைவில் தமிழகம் முழுக்க விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க..கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் திடீர் திருப்பம் - காதலி குடும்பத்தின் ‘அந்த’ செயல் !!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios