தமிழகத்தின் அணைகளை பாதுகாக்க அமைப்பு... அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கியது தமிழக அரசு!!
தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க மாநில அணை பாதுகாப்பு அமைப்பை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க மாநில அணை பாதுகாப்பு அமைப்பை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அணைகள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்த சட்டம், நாட்டில் உள்ள அணைகளை ஒரே சீராக பாதுகாக்க ஏற்ற வகையில் ஒரே மாதிரியான வழிமுறைகளை உருவாக்கும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்தியாவில் அணை பாதுகாப்புக்கு சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பு இல்லாததால் அணை பாதுகாப்பு பிரச்சினையாக இருக்கிறது. இதற்கு தீர்வுகாணத்தான் இந்த சட்டம் என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்த சட்டம், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம், மாநில அளவிலான அணை பாதுகாப்பு அமைப்புகளுடனும், அதன் உரிமையாளர்களுடனும் பாதுகாப்பு தொடர்பான தரவுகள் மற்றும் நடைமுறைகளை தரநிலைப்படுத்துவதற்காக தொடர்பு கொள்ளும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடக்கும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
இந்த சட்டத்தின்கீழ் இப்போது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தை ஏற்படுத்தி, அது தொடர்பான அரசிதழ் அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிக்கையில், அணைகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தேசிய ஆணையத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்காக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தை மத்திய அரசு ஏற்படுத்துகிறது. இந்த ஆணையம் 2022 பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் தொழில் முதலீட்டு மாநாடு.. ஓராண்டில் 2.25 லட்சம் பேருக்கு வேலை.. அமைச்சர் அறிவிப்பு..
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க மாநில அணை பாதுகாப்பு அமைப்பை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க மாநில அணை பாதுகாப்பு அமைப்பை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அணை பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மண்டலங்களின் தலைமைப் பொறியாளர்கள் உட்பட 15 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அணையின் பாதுகாப்பு, நீர் வருகை, நீர் வெளியேற்றம் உள்ளிட்டவைகளை இந்த அமைப்பு கண்காணிக்கும் என கூறப்படுகிறது.