சென்னையில் தொழில் முதலீட்டு மாநாடு.. ஓராண்டில் 2.25 லட்சம் பேருக்கு வேலை.. அமைச்சர் அறிவிப்பு..

ஜூலை 4 ஆம் தேதி சென்னையில் தொழில் முதலீட்டு மாநாடு நடைபெறும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டில் மட்டும் 2.25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
 

Industry Investors Conference in Chennai on July 4th -  Minister Thangam Thennarasu announcement

இதுக்குறித்து சென்னை தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி சென்னையில் வரும் 4 ஆம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க:MP, MLA க்களுக்கு லஞ்சம் தரணும்..ரூ4800 கோடி கடன் தாங்க.. ரிசர்வ் வங்கியையே அலறவிட்ட குடியரசு தலைவர் வேட்பாளர்

தொழில்துறையில் மறுமலர்ச்சி:

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் தொழில்துறையில் மாபெரும் மறுமலர்ச்சி நிகழ்திருப்பதாக கூறிய அமைச்சர், இதுவரை 132 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தற்போது நடைபெறவுள்ள தொழில் முதலீட்டு மாநாட்டில் பல்வேறு புதிய தொழில் நிறுவனங்களுடன் தமிழக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளவிருப்பதாக அமைச்சர் குறிப்பிடார்.

மேலும் படிக்க:முதல்வர் இதை செய்தே ஆகணும்..புற்றுநோயில் மக்கள் தவிப்பு - பாஜக MLA எம்.ஆர்.காந்தி

2.25 பேருக்கு வேலைவாய்ப்பு:

மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள தொழில்நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கின்றன. உலகளவில் திறன் மேம்பாட்டில் தமிழ்நாடு ஒரு உந்து சக்தியாக இருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.94,975 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் 2 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறினார். 

மேலும் படிக்க:வரும் ஜூலை 10 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை.. பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு..

தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு:

அதோடுமட்டுமல்லாமல், மதுரை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமையவுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். செமி கண்டக்டர்கள், மின் வாகனங்கள், லித்தியம் அயர்ன் பேட்டரிகள்,  சூரிய ஒளி மின்னழுத்திகள், சோலார் போட்டோ வோல்டிக் உற்பத்தி ஆகியவை புதிய துறைகளாக உருவாகி வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios