ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடக்கும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி உயர்வு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டும் அரசு பள்ளிகள், நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பற்றிய கலந்தாய்வுக் கூட்டம் குறித்தான முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு.. கோவை மேயர் வீட்டை அழகுபடுத்த ரூ 1 கோடியா..? அதிமுக கவுன்சிலரின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு
பதவி உயர்வுக்கான கலந்தாய்வு
அதாவது, தமிழக பள்ளிக் கல்வித் துறையில் உள்ள அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் கல்வி தகவலியல் மேலாண்மை முறைமை (EMIS) மூலமாக இணைய வழியில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. டுவிட்டர் பக்கத்தில் தனது அதிமுக பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி.. !
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு ஜூலை 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
அந்த வகையில், அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 11ஆம் தேதியும், அரசு, நகராட்சி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 12ஆம் தேதியும், அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 13ஆம் தேதியும், இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 14, 15ஆம் தேதிகளிலும் நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும்" என்று குறிப்பிப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. SP Velumani: எஸ்.பி வேலுமணியின் கோரிக்கை நிராகரிப்பு.. ஆப்பு வைத்த சென்னை உயர் நீதிமன்றம்.!