Asianet News TamilAsianet News Tamil

குடியரசுத் தலைவரிடம் புகார் அளித்த திமுக: நாளை டெல்லி செல்கிறார் ஆளுநர் ரவி

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வைத் தொடர்ந்து டி.ஆர்.பாலு உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று குடியரசுத் தலைவரை சந்தித்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

tn governor rn ravi flies to delhi tomorrow
Author
First Published Jan 12, 2023, 3:56 PM IST

ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு சார்பில் தயாரித்து வழங்கப்பட்ட உரையை தாமாக மாற்றம் செய்து அவையில் வாசித்தார். இது மிகவும சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் பேசிய உரை, அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்.

700 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவிலில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய காவல்துறையினர்

இதனால், ஆத்திரமடைந்த ஆளுநர் ரவி அவை நிறைவு பெறும் முன்னரே சட்டமன்றத்தில் இருந்து வேக வேகமாக வெளியேறினார். ஆளுநர், முதல்வர் இடையேயான மோதல் போக்கு பூதாகரமாகியுள்ள நிலையில், ஆளுநர் குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் அடங்கிய குழு ஆளுநர் குறித்து குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து இது தொடர்பாக புகார் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Jio 5G in Tamil Nadu: தமிழகத்தில் ஜியோ 5ஜி விரிவாக்கம்!! உங்க ஏரியா இருக்கானு பாருங்க!!

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை பகல் 1 மணியளவில் டெல்லி செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஒரு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் நாளை மறுநாள் தமிழகம் திரும்ப உளதாகக் கூறப்படுகிறது. ஆளுநர் குறித்து திமுக உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரிடம் புகார் அளித்துள்ள நிலையில் ஆளுநரின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Governor Ravi, RN Ravi, Tamil Nadu, Mk Stalin, Politics, TN Assembly, ஆளுநர் ரவி, ஆர்.என் ரவி, ஸ்டாலின், தமிழ் நாட

Follow Us:
Download App:
  • android
  • ios