பழமையான காளியம்மன் கோவிலில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய காவல்துறையினர்

கோபிசெட்டி பாளையம் அருகே  700 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் நடைபெற்ற குண்டம் திருவிழாவில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

more than one lakh devotees participate fire threading ceremony in gobichettipalayam kaliamman temple

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரியூர் கொண்டத்து காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்ளும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

சென்னை விமான நிலையத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.124 மதிப்பில் கடத்தல் பொருள் பறிமுதல்

இந்த ஆண்டும் கடந்த டிசம்பர்  29ம் தேதி பூச்சூட்டுதலுடன் திருவிழா தொடங்கியதைத் தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த 30 டன் விறகுகளை கொண்டு திருக்குண்டம் அமைப்பதற்கான பணிகள் துவங்கியது.

இங்குள்ள அம்மன் சன்னதிக்கு எதிரே இரவு முழுவதும் விறகுகளை எரித்து குண்டம் தயார் செய்யப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நந்தா தீபம் ஏற்றப்பட்ட பின்னர் கோவில் தலைமை பூசாரி சத்தி சரவணகுமார் குண்டத்திற்க்கு சிறப்பு பூஜை செய்த பின்  முதலில் தீ மிதித்து குண்டம் இறங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார்.

Jio 5G in Tamil Nadu: தமிழகத்தில் ஜியோ 5ஜி விரிவாக்கம்!! உங்க ஏரியா இருக்கானு பாருங்க!!

அதனைத்தொடர்ந்து கடந்த 15 நாட்களாக காப்பு கட்டி விரதமிருந்து நேற்று காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த காவல்துறை அதிகாரிகள் உள்பட ஆண் மற்றும் பெண்  பக்தர்கள் வரிசையாக குண்டம் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios