வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்; நிறுவன உரிமையாளர்கள் மனு

கோவையில் இருந்து நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துமாறு கோவை மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மனு அளித்துள்ளனர்.

tn government should promise a migrant workers safety factories owners petitioned to district collector in coimbatore

தொழில் நகரமான கோவையில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறி சமூக வலை தளங்களில் தவறான செய்திகள் தொடர்ந்து பரவுகின்றனது. இதனைத் தொடர்ந்து வட மாநிலத்தில் உள்ள தொழிலாளிகளின் பெற்றோர்கள் தொடர்ந்து இங்கு பணிபுரிந்து வருபவர்களுக்கு நெருக்கடி கொடுத்து அவர்களை மீண்டும் ஊருக்கு வர வற்புறுத்துவதாகவும், இங்கே பணிபுரிந்து வருகின்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேற்றைய தினத்திலிருந்து பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என தங்கள் நிறுவன உரிமையாளர்களிடம் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர்  அவர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், தொழிலாளிகள் கேட்கும் நிலையில் இல்லாத சூழல் தொடர்ந்து வருகின்றது. பல நெருக்கடிகளை சந்தித்து வரும் தொழில் முனைவோர்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தி தொழில் முடக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தொழில் முனைவோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் தமிழக அரசு பீகார் மாநில அரசுடன் பேசி இங்கு பணிபுரிகின்ற வடமாநில தொழிலாளர்களின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் வகையில் பீகார் அரசு அந்த மாநிலத்தில் பெரும் அறிவிப்புகளை செய்ய வேண்டும்.

திருச்சி மக்களின் உணர்வுகளில் ஒன்றான காவிரி பாலம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது

கோவை உள்ளிட்ட தமிழகத்தில் இந்தி மொழியில் தொழிலாளிக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் பதிவுகள் செய்து அதை காவல்துறை மூலமாகவும், அரசுத்துறை மற்றும் ஊடகங்கள் மூலமாகவும் உடனடியாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல்துறையின் வாகனங்கள் மூலம் தேவையான பகுதிகளில் அச்சத்தை போக்கும் வகையில் அறிவிப்புகளை ஒலிபெருக்கி மூலம் பரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தொழில் அமைப்புகளின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios