TN Budget 2022-23 :பள்ளிக் கல்வித்துறைக்கு கூடுதலாக ரூ.4300 கோடி : பேராசிரியர் அன்பழகன் திட்டம் அறிமுகம்
TN Budget 2022-23 தமிழகத்தின் 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு கடந்த ஆண்டைவிட கூடுதலாக ரூ. 4,300 கோடி ஒதுக்கீடு செய்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு கடந்த ஆண்டைவிட கூடுதலாக ரூ. 4,300 கோடி ஒதுக்கீடு செய்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் அறிவித்துள்ளார்.
ரூ.4,300 கோடி அதிகம்
கடந்த 2021-22ம் ஆண்டு திருத்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், வரும் நிதியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.36,985.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஏறக்குறைய 4,296ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.7ஆயிரம் கோடி குறையும்: நிதிஅமைச்சர் பெருமை
2022-23ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதிஅமைச்சர் பழனிவேல் ராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அவர் பள்ளிக்கல்வித்துறைக்கான ஒதுக்கீடு குறித்து பேசியதாவது:
ரூ.200 கோடி
கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. மாணவர்களிடையே கற்றல் இழப்பை ஈடுகட்டும் வகையில் இல்லம் தேடி கல்வித்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தேசத்துக்கே முன்னோடித் திட்டமாக செயல்பட்ட இந்தத் திட்டம், 38 மாவட்டங்களில் 1.80 தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.
2 ஆண்டுகளில் கற்றில் பெருமளவு குறைபாடு ஏற்பட்டுள்ளதால் வரும் நிதியாண்டில் இந்த்த திட்டம் தொடர்ந்து செயல்படும் இதற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெளியூர் பயணத்தை தவிர்த்துவிடுங்கள்.. தலைமைச் செயலாளர் இறையன்பு அதிரடி.. காரணம் என்ன தெரியுமா?
முன்மாதிரி பள்ளிகள்
அரசுப்பள்ளி மாணவர்கள், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் சேர்ந்து கல்விபயில்வதற்கு உதவியாக, 10 மாவட்டங்களில் முன்மாதிரிப் பள்ளிகள் தொடங்கியுள்ளது. நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 15 மாவட்டங்களில் முன்மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படும். இதற்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பேராசிரியர் அன்பழகன் திட்டம்
அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளை நவீனமயமாக்குவதற்காக பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். அரசுப்பள்ளிகளில் கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்பட்டு, 18ஆயிரம் புதியவகுப்பறைகள் கட்டப்படும். ஸ்மார்ட் வகுப்பறை, கணினி ஆய்வகங்கள், இந்த திட்டங்கள் ரூ.7ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும். வரும் நிதியாண்டில் ரூ.1300 கோடியில் செயல்படுத்தப்படும்.
அரசு நூலங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்ய தனியாக ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.36 கோடி மதிப்பில் பல்வேறு வகையான வசதிகள் கொண்ட நூலகங்கள் அடுத்த 2 ஆண்டுகளில் உருவாக்கப்படும்.
"பட்ஜெட் முடியட்டும்.. எல்லாமே பண்ணிடலாம்.." ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அன்பில் மகேஷ் !
புத்தகக் கண்காட்சி
தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் புத்தகவாசிப்பை மேம்படுத்தும் நோக்கில் சென்னையில்மட்டும் நடத்தப்பட்டு வந்த புத்தகக் காண்காட்சி, இலக்கியத்திருவிழாக்கள் இனிமேல் மாவட்டந்தோறும் ஏற்படுத்தப்படும். இதற்காக ரூ.5.60 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் பாட புத்தகங்கள் வழங்கப்படும். தமிழ் மற்றும் இந்தோ - ஐரோப்பிய மொழிகள் தொடர்பு குறித்து ஆய்வு செய்யப்படும் தமிழ் மொழி குறித்த ஆய்வுக்காக ரூ2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
இவ்வாறு பழனிவேல் ராஜன் தெரிவித்தார்