Asianet News TamilAsianet News Tamil

வெளியூர் பயணத்தை தவிர்த்துவிடுங்கள்.. தலைமைச் செயலாளர் இறையன்பு அதிரடி.. காரணம் என்ன தெரியுமா?

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர்  இன்று தொடங்குவதால் அனைத்து துறை செயலாளர்களும் சென்னையிலேயே இருங்கள். துறை செயலாளர்கள் அனைவரும் வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

All departmental secretaries should avoid outbound travel.. tamil nadu secretariat irai anbu
Author
Chennai, First Published Mar 18, 2022, 9:05 AM IST

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர்  இன்று தொடங்குவதால் அனைத்து துறை செயலாளர்களும் சென்னையிலேயே இருங்கள். துறை செயலாளர்கள் அனைவரும் வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

பரபரப்பான சூழ்நிலையில் தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) இன்று காலை 10 மணிக்கு சென்னை, தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. கூட்டம் தொடங்கியதும், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றுவார். இந்நிலையில், தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்து துறை செயலாளர்களும் சென்னையிலேயே இருக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

All departmental secretaries should avoid outbound travel.. tamil nadu secretariat irai anbu

இது தொடர்பாக,அனைத்து அரசு செயலாளர்களுக்கும் இறையன்பு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்;- தமிழக பட்ஜெட் கூட்டத் தொடருக்காக மார்ச் 18 (இன்று)  சட்டமன்றம் கூடுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்கள் இருப்பு அவசியம். எனவே, நீங்கள் தலைமையகத்தில் இருக்குமாறும், சட்டசபை கூட்டத் தொடரின் போது சுற்றுப்பயணத்தை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள துறைத் தலைவர்களுக்கு நீங்கள் இதே போன்ற அறிவுறுத்தல்களை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios