"பட்ஜெட் முடியட்டும்.. எல்லாமே பண்ணிடலாம்.." ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அன்பில் மகேஷ் !
பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக ஆசிரியர்களுக்கு சூப்பர் செய்தியை அறிவித்து இருக்கிறார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி :
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டு பணிக்கு சேர முடியாமல் பல ஆசிரியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் பணிநியமனத்தை உடனடியாக நிறைவேற்ற கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளின் நிலை குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.
மகிழ்ச்சி செய்தி :
இதில், 5 மாவட்டங்களை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளை மேம்படுத்துவது தொடர்பாக கோரிக்கைகளை தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், '2013ஆம் ஆண்டில் இருந்து 80 ஆயிரம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆசிரியர்கள் புதிதாக நியமனம் குறித்து பல கேள்விகள் உள்ளது.
அதை எப்படி சரிசெய்வது என்பது குறித்து பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பிறகு முதலமைச்சர்களுடன், கலந்து ஆலோசித்து விட்டு முடிவெடுக்கப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய வட்டாரங்களில் உள்ள பள்ளிகளில் பணிக்கு வருவதற்கு ஆசிரியர்களிடையே தயக்கம் நிலவுகிறது' என்றார். இந்த செய்தி ஆசிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.