முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும், அதனால்தான் சாதி குறித்த விவரம் கேட்கப்படுகிறது.. அன்பில் மகேஷ் விளக்கம்.

 இதே கருத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடுத்துள்ளார். இதுதொடர்பான செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும் என்பது அரசின் கடமை அதனால் தனது அனைத்து நிகழ்வுகளிலும் கல்வி, சுகாதாரம் குறித்து முதல்வர் பேசி வருகிறார்.

The thorn can only be taken by the thorn, which is why the details of the caste are asked .. Anbil Mahesh Explanation.

முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் என்பதால்தான் சாதி விவரம் கேட்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். மாணவர்கள் சலுகைகளை பெற சாதி குறித்து கேட்க வேண்டியுள்ளது என்றும் ஆனால் சாதியை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். சென்னை அரசுப் பள்ளிகளில் சாதித் தகவல்கள் கேட்டு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார். 

மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அரசியல் ரீதியாக ஒரு சித்தாந்த ரீதியாகவும் அரசு எடுத்து வரும் அவர் நடவடிக்கைகளை மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. பெரும்பாலான திட்டங்கள் சமூக சீர்திருத்த அடிப்படையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சாதி குறித்த விவரங்கள் கேட்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அனைவரும் சமம் என கற்றுக் கொடுக்க வேண்டிய இடங்களிலேயே சாதி விவரங்கள் கேட்கப்படுகிறது என பலரும் சமூக வலைதளத்தில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

The thorn can only be taken by the thorn, which is why the details of the caste are asked .. Anbil Mahesh Explanation.

இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அதுகுறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. துறை சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை அடிப்படையாக வைத்து நாளிதழ்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறித்த விவர பதிவேட்டில் அவர்கள் ஜாதி குறித்து கேட்க பட்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி சட்டம் நடைமுறைக்கு வந்தது முதலே ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை வகுத்த பின்பு அது குறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு தொடர்புடைய பள்ளிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான நிதி வழங்கப்படும்.

அந்தவகையில் 2020 -2021 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் மேம்படுத்தும் திட்டம் வகுக்கப்பட்டது குறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு தகவல் அனுப்பாத பள்ளிகள் விரைந்து தகவல் அனுப்ப வேண்டும் என கோரப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் தான் குழந்தைகள் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்களா? பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்ளா? பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது சிறுபான்மையினர், முற்பட்ட வகுப்பினர் அல்லது மேம்பட்ட சமூகத்தினர என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எந்த வகுப்பைச் சார்ந்தவர்கள் என்பதால் அரசுக்கு முக்கியமே தவிர அவர்கள் எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்பது அல்ல சாதி கேட்க வேண்டும் என்பதோ நோக்கமல்ல. அவர்களுக்கு உரிய  சலுகைகளை வழங்கதான் கேட்கப்படுகிறதே ஒழிய சாதிகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல என விளக்கம் அளித்துள்ளது.

The thorn can only be taken by the thorn, which is why the details of the caste are asked .. Anbil Mahesh Explanation.

இந்நிலையில்தான் இதே கருத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடுத்துள்ளார். இதுதொடர்பான செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும் என்பது அரசின் கடமை அதனால் தனது அனைத்து நிகழ்வுகளிலும் கல்வி, சுகாதாரம் குறித்து முதல்வர் பேசி வருகிறார். அரசு மற்றும் அதிகாரிகள்ளாங் மட்டுமே சீராக எதிர்காலத்தை உருவாக்க முடியும். அதாவது பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் சாதி கேட்கப்படுகிறது என பலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால் முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் என்பதால் சாதி ஏற்றத்தாழ்வை களைய சாதி குறித்த விவரம் இடம் பெறுகிறது. மாணவர்கள் சலுகைகளை பெற சாதி குறித்து கேட்க வேண்டியுள்ளது, அதே நேரத்தில் சாவியை பதிவு செய்தே ஆக வேண்டும் என்பது கட்டாயமில்லை , அதேபோல எமிஸ் தள படிவத்தில் சாதி விவரம் வராத வகையில் ப BC,MBC என்பது போல சாதி பிரிவு மட்டும் வரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவித்துள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios