பிளஸ் 1 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு.. தேர்வு எப்போது..? முழு தகவல்..
பிளஸ் 1 துணைத்தேர்வுக்கு ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மாநில பாடத்திட்டத்தின் கீழ் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழகம் முழுவதும் 8.3 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்தாண்டில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க:முன்னாள் அமைச்சரின் முறைகேட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒத்துழைப்பு.? நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன்?-மநீம
பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 84.66% பேரும் மாணவிகளில் 94.99% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 % அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 96.04% ஆக இருந்த நிலையில் இந்தாண்டு 5.97% ஆக குறைந்துள்ளது. இந்தாண்டு 11 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் 95.56 % மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
மேலும் படிக்க:மகளை கடத்திய நித்யானந்தா.. போலீசில் தந்தை கொடுத்த 'பகீர்' புகார் - ஆசிரமத்தில் அதிரடி ரெய்டு!
இந்நிலையில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 துணைத்தேர்வுக்கு ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கை - எப்போது தொடங்கும் ? அன்புமணி ராமதாஸ் கேள்வி
அதன்படி, ஆகஸ்ட் மாதம் நடைபெறும் உடனடி தேர்வுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது அரசு தேர்வுகள் சேவை மையங்களிலோ அல்லது அந்தந்த பள்ளிகளிலோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.