மகளை கடத்திய நித்யானந்தா.. போலீசில் தந்தை கொடுத்த 'பகீர்' புகார் - ஆசிரமத்தில் அதிரடி ரெய்டு!
Nithyananda : நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து தனது மகளை மீட்டுத் தரக் கோரி பெங்களூருவை சேர்ந்த தந்தை ஒருவர் திருவண்ணாமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நித்யானந்தா ஆசிரமம்
பெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஷ். இவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கர்நாடக மாநிலத்தில் பிடதி பகுதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு சேவைகளை செய்து வந்துள்ளனர். 2019-ம் ஆண்டு நாகேஷ் அவரது மனைவி மற்றும் மூத்த மகள் ஆசிரமத்தில் இருந்து வெளியேறினர். 2-வது மகள் மட்டும் ஆசிரமத்தில் தங்கி தொடர்ந்து சேவை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வப்போது ஆசிரமத்திற்கு நேரில் சென்று நாகேஷ் அவரது மகளை பார்த்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக அவரது மகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிடதியில் ஆசிரமத்தை தொடர்பு கொண்டு தனது மகளை கண்பிக்குமாறு கேட்டுள்ளார். அந்த சமயத்தில் செல்போன் மூலம் வீடியோ காலில் நாகேஷ் பேசி வந்துள்ளார். அதன்பிறகு தனது மகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?
திருவண்ணாமலை
இதனையடுத்து பிடதி ஆசிரமத்தில் உள்ள தனது மகளை மீட்டுத் தருமாறு கர்நாடக போலீசில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் செய்தார். ஆனால் பிடதி ஆசிரமத்தில் இருந்து நாகேஷின் மகள் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ததாக நாகேஷுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர் தனது மகளை பல இடங்களில் தேடியுள்ளார். இந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடி அண்ணாமலையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் நாகேஷின் மகள் இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க : தேமுதிக தலைவர் ஆகிறாரா விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ? வெளியான அதிர்ச்சி தகவல் !
இதையடுத்து நாகேஷ் திருவண்ணாமலை தாலுகா போலீசில் தனது மகளை மீட்டுத்தருமாறு புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் நேற்று இரவு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாமாலினி தலைமையில் போலீசார் நித்யானந்தா ஆசிரமத்திற்கு நாகேஷ் மற்றும் அவரது மனைவியுடன் நேரில் சென்று சோதனை நடத்தினர். அங்கு அவரது மகள் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : AIADMK : ஒற்றை தலைமைக்கு 'ஓகே' சொன்ன சசிகலா.. அடுத்து எடப்பாடியா? பன்னீரா? உச்சகட்ட பரபரப்பு