திருவள்ளூர் மாணவி தற்கொலை.. சந்தேக மரணமாக வழக்கு பதிவு.. மாடியிலிருந்து தள்ளிவிட்டார்களா..? டிஜஜி பதில்..
திருவள்ளூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் போலீசாரில் முதல் கட்ட விசாரணையில், மாணவி துக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் மாடியிலிருந்து தள்ளிவிட்ட மாதிரியான எந்த அறிகுறியும் இல்லை என்றும் காஞ்சிபுரம் டிஜஜி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் செயல்படும் தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் தற்போது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சரளா, கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து கிளப்பியதாகவும் அறையில் இருந்த சக நண்பர்களுடன் சகஜமாக பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே காலை உணவு அருந்த உடனிருந்த மாணவிகள் சென்ற நிலையில், அறையில் தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க:பள்ளி மாணவி தற்கொலை.. நைட் நல்லா தான் பேசுனா.. ஆனா காலையிலே எம்பிள்ளை உயிரோட இல்லை.. கதறும் பெற்றோர்..
இச்சூழலில் மாணவியின் இறப்பு குறித்து பள்ளி நிர்வாகம் முறையாக தகவல் அளிக்கவில்லை என்றும் கால தாமதாக மாணவி தற்கொலை குறித்து தகவல் தெரிவித்ததாகவும் கூறி மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். திருத்தணி - பொதாட்டூர்பேட்டை சாலையில் மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்றிரவு மாணவி சரளா பெற்றோர்களிடம் வழக்கம் போல நன்றாக பேசியதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பள்ளியின் முன்பு உறவினர்களின் போராட்டம் வலுத்துள்ளது.
மேலும் படிக்க:பிளஸ் 2 மாணவி தற்கொலை.. வழக்கு சிபிசிஐடி மாற்றம்.. விடுதி காப்பாளரிடம் விசாரணை..
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் டிஐஜி சத்யபிரியா, திருவள்ளூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டோம் . மேலும் மாணவி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தினோம். தற்போது வரை முதல் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாணவி மரணம் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியின் மாணவி மரணம் தொடர்பான வழக்குகள் அனைத்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவின் படி, மாணவி சரளா மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மாணவி தற்கொலை தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு விசாரிப்பார்கள். விடுதி காப்பாளர், பள்ளி மாணவிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதுக்குறித்து தற்போது எந்த தகவலும் தெரிவிக்க முடியாது என்று கூறினர். இதுமட்டுமில்லாமல், காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் பள்ளி மாணவி தூக்கிட்டு தான் தற்கொலை செய்துக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க:திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை.. உறவினர்கள் சாலை மறியல்
மாடியிலிருந்து தள்ளிவிட்ட மாதிரியான எந்த அறிகுறியும் இல்லை என்று குறிப்பிட்டார். மேலும் சம்பந்தபட்ட பள்ளியில் தடயவியல் துறை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.மருத்துவ குழுவினரால் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டு மாணவியின் பிரேத பரிசோதனை நடைபெறும் என்று மாவட்ட எஸ்.பி தெரிவித்தார். மற்ற மாணவிகளை அவர்களது பெற்றோர்கள் அழைத்து செல்வதாக கூறியதால், அதற்கு அனுமதித்தோம் என்றும் அவர் விளக்கமளித்தார்.