பிளஸ் 2 மாணவி தற்கொலை.. வழக்கு சிபிசிஐடி மாற்றம்.. விடுதி காப்பாளரிடம் விசாரணை..

திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் பள்ளி மாணவி தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பான வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி, பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என்றும் தெரிவித்தார்
 

Thiruvallur student suicide case transferred to CBCID

திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் செயல்படும் தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் வழக்கம் போல் பேசிக்கொண்டிருந்த நிலையில், அவர்கள் உணவு அருந்த சென்ற நிலையில், அறையில் தனியாக இருந்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக  முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பூசனம் என்பவரது மகள் சரளா , இவர் திருவள்ளுவர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனிடையே சக நண்பர்கள் உணவு அருந்த சென்ற நிலையில், அறையில் தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரந்து வந்த திருவள்ளூர் துணை காவல் கண்காணிப்பாளர் சந்திர தாசன், காவல் உதவி ஆய்வாளர் இளங்கோ மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மாணவி தற்கொலை குறித்து மாவட்ட எஸ்.பி , திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் விடுதி காப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் இடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மற்றும் மாணவியின் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவியின் இறப்பு குறித்து பள்ளி நிர்வாகம் முறையாக தகவல் அளிக்கவில்லை என்றும் கால தாமதாக இறப்பு குறித்து தெரிவித்ததாகவும்  கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். திருத்தணி - பொதாட்டூர்பேட்டை சாலையில் மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாணவி தற்கொலை செய்துக்கொண்ட தனியார் பள்ளியில் காவல்துறை அதிகாரிகள் திவீர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் டிஜஜி சத்யபிரியா, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்ற்னர். மேலும் சிபிசிஐடி டிஎஸ்பி செல்வகுமாரும் பள்ளி மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் தனியார் பள்ளியில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மாணவி தற்கொலை செய்துக்கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி மாணவி தற்கொலை குறித்து விசாரணையில் முடிவில் தான் முழுமையான தகவல் தெரிய வரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios