பள்ளி மாணவி தற்கொலை.. நைட் நல்லா தான் பேசுனா.. ஆனா காலையிலே எம்பிள்ளை உயிரோட இல்லை.. கதறும் பெற்றோர்..

திருத்தணி - பொதாட்டூர்பேட்டை சாலையில் மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்றிரவு மாணவி சரளா பெற்றோர்களிடம் வழக்கம் போல நன்றாக பேசியதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பள்ளியின் முன்பு உறவினர்களின் போராட்டம் வலுத்துள்ளது.திருத்தணி - பொதாட்டூர்பேட்டை சாலையில் மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்றிரவு மாணவி சரளா பெற்றோர்களிடம் வழக்கம் போல நன்றாக பேசியதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பள்ளியின் முன்பு உறவினர்களின் போராட்டம் வலுத்துள்ளது.

Tiruvallur student commits suicide - Parents and Relatives protest

திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் செயல்படும் தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இதுக்குறித்தான வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டு, போலீசார் விடுதி காப்பாளர் மற்றும் சக நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த மாணகி சரளா, கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

Tiruvallur student commits suicide - Parents and Relatives protest

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து கிளப்பியதாகவும் அறையில் இருந்த சக நண்பர்களுடன் சகஜமாக பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே காலை உணவு அருந்த உடனிருந்த மாணவிகள் சென்ற நிலையில், அறையில் தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க:பிளஸ் 2 மாணவி தற்கொலை.. வழக்கு சிபிசிஐடி மாற்றம்.. விடுதி காப்பாளரிடம் விசாரணை..

இதனையடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் , காவல் உதவி ஆய்வாளர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து எஸ்.பி , வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறையினர் விடுதி காப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் இடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வகையில், பள்ளி மற்றும் மாணவியின் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tiruvallur student commits suicide - Parents and Relatives protest

இச்சூழலில் மாணவியின் இறப்பு குறித்து பள்ளி நிர்வாகம் முறையாக தகவல் அளிக்கவில்லை என்றும் கால தாமதாக மாணவி தற்கொலை குறித்து தகவல் தெரிவித்ததாகவும்  கூறி மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். திருத்தணி - பொதாட்டூர்பேட்டை சாலையில் மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்றிரவு மாணவி சரளா பெற்றோர்களிடம் வழக்கம் போல நன்றாக பேசியதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பள்ளியின் முன்பு உறவினர்களின் போராட்டம் வலுத்துள்ளது.

மேலும் படிக்க:திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை.. உறவினர்கள் சாலை மறியல்

இந்நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியில் காஞ்சிபுரம் டிஜஜி , காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். சிபிசிஐடி டிஎஸ்பி தனியார் பள்ளியில் விசாரணை மேற்கொண்டார். மாணவி தற்கொலை செய்துக்கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி மாணவி தற்கொலை குறித்து விசாரணையில் முடிவில் தான் முழுமையான தகவல் தெரிய வரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மாணவியின் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios