தமிழகத்தில் இன்று முதல் 29-ம் தேதி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 29-ம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-38 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்ப நிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

மாணவர்களின் கல்வியைக் கேள்விக்குறியாக்கும் திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்ப நிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

அதே போல் லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோர பகுதிகள், கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு வரும் 29-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஈசிஆர் ரோட்டில் களைகட்டிய இஸ்கான் 40வது ஜகந்நாத் ரத யாத்திரை