சென்னையில் ஈசிஆர் ரோட்டில் களைகட்டிய இஸ்கான் 40வது ஜகந்நாத் ரத யாத்திரை
இஸ்கான் நடத்திய 40வது ஜகந்தாத் ரத யாத்திரையில் கலந்துகொண்டு தேர் இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இஸ்கான் அமைப்பின் சார்பில் சென்னையின் கிழக்குக் கடற்கரை சாலையில் ஸ்ரீ ஜகன்னாத் ரத யாத்திரை ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. 40வது ஆண்டாக நடந்த இந்த ரத யாத்திரை விழா கொண்டாடப்பட்டது.
ஒடிசாவின் பூரியில் ஒன்பது நாள் திருவிழா, 20 ஜூன் 2023 அன்று தொடங்கியது. இது பூரியில் ஜகந்நாதர் அவதரித்த நாளைக் முன்னிட்டு இந்த விழா நடைபெற்று வருகிறது. ஜெகநாதர் ரத யாத்திரை திருவிழாவில், அனைவருக்கும் தரிசனம் கொடுப்பதற்காக முக்கிய தெய்வங்கள் ஆண்டுக்கு ஒரு முறை தேரில் வலம் வந்து தரிசனம் தருவார்கள்.
ரத யாத்திரை திருவிழாவின் போது பக்தர்கள் தொடர்ந்து கீர்த்தனையில் ஈடுபட்டு, சைதன்ய மஹாபிரபுவால் பிரச்சாரம் செய்யப்பட்ட புனித நாமங்களை உச்சரித்தனர். பூரி கோயில் துவாரகாவைக் குறிக்கிறது. மேலும் வருடத்திற்கு ஒருமுறை, கிருஷ்ணர் ஜகந்நாதராக அவரது குழந்தைப் பருவ இல்லமான பிருந்தாவனத்துக்குச் செல்கிறார்.
திடீரென போராட்டத்தைக் கைவிட்ட மல்யுத்த வீராங்கனைகள்! நீதிமன்ற போராட்டம் தொடரும் என அறிவிப்பு!
இந்த ஆண்டு இஸ்கான் ரத யாத்திரை ராயல் என்ஃபீல்டு ஷோரூம் அருகே பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கியது. அங்கிருந்து பாலவாக்கம், நீலாங்கரை, வெட்டுவான்கேணி, ஈஞ்சம்பாக்கம் வழியாகச் சென்று, கோயல் மார்பிள் அருகே உள்ள முடிவுக்கு நிறைவு பெற்றது.
விழாவிற்கு இஸ்கான் நிர்வாகக் குழு ஆணையர் பானு சுவாமி மகராஜ் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு கெளரவ விருந்தினர்களாக தொழிலதிபர் ஸ்ரீ சுரேஷ் சங்கி மற்றும் நாயர் அசோசியேட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீ சுனில் நாயர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ரத யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வழியெங்கும் கீர்த்தனைகள் இசைக்கப்பட்டு, தேர் இழுத்த பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.
6 இஸ்லாமிய நாடுகள் மீது 26,000 குண்டுகளைப் போட்டது ஒபாமா: நிர்மலா சீதாராமன் பதிலடி