Tamil Nadu Municipalities: ரீபெரும்புதூர், மாமல்லபுரம் மற்றும் திருவையாறு ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த முடிவு தமிழக அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய மூன்று பேராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று அரசிதழில் வெளியாகியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப்பெருந்தகை கோரி இருந்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-2024ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின்போது இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அவருடைய கோரிக்கைக்கு பதிலளித்த நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு உள்பட சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன" என்று கூறினார். இதற்கான தீர்மானமும் தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அமைச்சரவையில் தீடீர் இலாகா மாற்றம்! பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு!

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் திருத்த சட்டத்தின் கீழ், இந்த மூன்று பேரூராட்சிகளின் வரலாறு, சுற்றுலா உள்ளிட்ட சிறப்புகள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான உத்தேச முடிவு எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஆகிய மூன்று பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்றுவது குறித்து சென்ற ஆகஸ்ட் மாதம் முதல் கட்ட அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், அந்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக உறுதிசெய்யும் வகையில், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய மூன்று பேரூராட்சிகளும் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசிதழில் இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திமுகவில் அதிரடி மாற்றங்கள்! 4 புதிய மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம்!