திருச்சியில் சிறப்பு தொழுகை; ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்திய இஸ்லாமியர்கள்
ரமலான் திருநாளை முன்னிட்டு திருச்சியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பு ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமலும், தொண்டையில் எச்சில் கூட விழுங்காமலும் மிகக் கடுமையான நோன்பு இருந்து ரமலானை கொண்டாடுவார்கள்.
நெல்லை மக்களவை தொகுதி தேர்தல் ரத்தாகிறதா? என்ன காரணம்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்!
அந்த வகையில் இந்த ஆண்டு ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார். அதன்படி, இன்று அதிகாலையில் இஸ்லாமியர்கள் சிறப்பு ரமலான் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
“பிரதமர் மோடியை சந்திக்க ஆர்வமாக உள்ளேன்..” இந்தியா வருகையை உறுதி செய்த எலான் மஸ்க்..
திருச்சியில் மரக்கடை பகுதியில் உள்ள அரசு சையத் முதுஷா மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர் இணைந்து தொழுகையில் ஈடுபட்டனர். புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையை தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி அன்பை பரிமாறி கொண்டு மகிழ்ந்தனர்.