“பிரதமர் மோடியை சந்திக்க ஆர்வமாக உள்ளேன்..” இந்தியா வருகையை உறுதி செய்த எலான் மஸ்க்..

எலான் மஸ்க், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இந்த மாதம் இந்தியா வர உள்ளதை உறுதி செய்துள்ளார்.

Tesla s Elon Musk confirms India visit, says "Looking forward to meeting with PM Narendra Modi in India Rya

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இந்த மாதம் இந்தியா வரவுள்ளார், மேலும் நாட்டில் முதலீடு மற்றும் புதிய தொழிற்சாலையைத் திறப்பதற்கான திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி ஏப்ரல் 22-ம் தேதி டெல்லியில் எலான் மஸ்க் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாகவும், தனத் இந்தியத் திட்டங்கள் குறித்து தனித்தனியாக அறிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி தனது வருகையின் போது மற்ற நிர்வாகிகளுடன் இருப்பார் என்று முதல் வட்டாரம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க் ” இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

எலான் மஸ்க் மற்றும் மோடி கடைசியாக ஜூன் மாதம் நியூயார்க்கில் சந்தித்தனர், மேலும் டெஸ்லா நிறுவனம் மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி வரிகளைக் குறைக்க இந்தியாவை பல மாதங்களாக வற்புறுத்தியது. ஒரு உற்பத்தியாளர் குறைந்தபட்சம் $500 மில்லியன் முதலீடு செய்து தொழிற்சாலையை நிறுவினால், சில மாடல்களில் இறக்குமதி வரிகளை 100% இலிருந்து 15% ஆகக் குறைக்கும் புதிய EV கொள்கையை இந்தியா கடந்த மாதம் வெளியிட்டது.

வேலைவாய்ப்புக்காக இந்த நாட்டுக்கு போறீங்களா? மக்களே உஷார்.. விசா விதிகள் அதிரடி மாற்றம்..

சுமார் $2 பில்லியன் முதலீடு தேவைப்படும் ஒரு உற்பத்தி ஆலைக்கான தளங்களைப் பார்ப்பதற்காக டெஸ்லா அதிகாரிகள் இந்த மாதம் இந்தியாவிற்கு வருவார்கள் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. 

டெஸ்லா இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக அதன் ஜெர்மன் ஆலையில் வலது கை டிரைவ் கார்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த எலான் மஸ்க் "எல்லா நாடுகளிலும் மின்சார கார்கள் இருப்பதைப் போல இந்தியாவிலும் மின்சார கார்கள் இருக்க வேண்டும். இந்தியாவில் டெஸ்லா மின்சார வாகனங்களை வழங்குவது இயற்கையான முன்னேற்றம்" என்று கூறினார்.

உலகிலேயே விலை உயர்ந்த ஷூ இது தான்.. விலையை கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க.. எவ்வளவு தெரியுமா?

டெஸ்டாலின் முக்கிய அமெரிக்க மற்றும் சீன சந்தைகளில் மின்சார வாகன தேவை குறைவதால், அந்நிறுவனம் இந்தியாவில் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் மின்சார வாகன சந்தை சிறியது என்றாலும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் உள்ளூர் கார் தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் (TAMO.NS) ஆதிக்கம் செலுத்துகிறது. 2023 ஆம் ஆண்டில் மொத்த கார் விற்பனையில் EVகள் 2% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios