மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ்.! மருத்துவ தம்பதியின் சூப்பர் ஐடியா !
மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ் அடித்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமீப காலமாக பாஸ்போர்ட் , ரேஷன் அட்டை போன்று திருமண பத்திரிகை அச்சிடும் பாணி கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் மாத்திரை அட்டை மாடலில் அச்சிடப்பட்ட பத்திரிகை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த எழிலரசனுக்கும் , விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த வசந்தகுமாரிக்கும் வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
இதில் எழிலரசன் மருந்தாளுனராகவும், வசந்தகுமாரி நர்சாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் திருமண அழைப்பிதழ் தான் மாத்திரை அட்டை மாடலில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இருவரும் மருத்துவம் சார்ந்த துறையில் பணிபுரிந்து வருவதால் தங்களுடைய அழைப்பிதழை மாத்திரை அட்டை வடிவில் உருவாக்கி உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு..தலையில் காயம்.. காண்டத்தை வைத்து கட்டு போட்ட வார்டு பாய் - அதிர்ச்சி சம்பவம்.!
மருந்தின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் எழில்-வசந்தா செப்-05 என தனது வருங்கால மனைவி பெயரைச் சேர்த்து திருமண நாளான செப்-05 ஐயும் இணைத்துவிட்டார். மேலும் மாத்திரையின் மூலப் பொருட்கள் இருக்க வேண்டிய இடத்தில் திருமண ஜோடியின் பெயரும், அவர்களது கல்வி வேலை விவரங்களை குறிப்பிட்டுள்ளனர். மேலும் மத்திரை தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் பெற்றோர்களின் பெயர் மற்றும் முகவரியை குறிப்பிட்டுள்ளனர்.
அதன் பக்கவாட்டில் நீல நிற எழுத்தில் திருமண நாள், வரவேற்பு நாள் விவரங்களையும் குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், எச்சரிக்கை எனக் குறிப்பிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தவறாமல் திருமணத்திற்கு வர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ள இந்த அழைப்பிதழை எல்லா சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு..ஜெயலலிதாவுக்கே எடப்பாடி துரோகம் செய்வார்.. சசிகலா நியாபகம் இருக்கா உங்களுக்கு? குமுறும் அதிமுக நிர்வாகி
இதுகுறித்து பேசிய மணமகன் எழிலரசன், ‘வித்தியாசமான அழைப்பிதழை அனைவருக்கும் வழங்க வேண்டும் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நானும், எனது மனைவியும் முடிவு எடுத்து இருந்தோம். திருமண அழைப்பிதழ் மாத்திரை வடிவில் வர வேண்டும் என்று முடிவு செய்தோம். மனிதனுக்கு அவ்வப்போது வரக்கூடிய உபாதைகளை தீர்க்கும் வகையில் ஒரு மாத்திரையை தேர்வு செய்ய வேண்டும் என எண்ணி அதற்காக அசிக்லோபெனாக் என்ற மாத்திரையை அசிக்லோபெனாக் வடிவ மாத்திரை போன்று கடைசியாக தேர்வு செய்தோம்.
மாத்திரை வடிவில் பின்புறம் உள்ள அட்டவணையில் அச்சடிக்கப்பட்ட வேண்டும் என கருதி பல நாள் காத்திருந்து அழைப்பிதழை தற்பொழுதான் நாங்கள் தயார் செய்து அனைவரிடத்திலும் கொடுத்து வருகிறோம். தங்களுடைய உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரிடத்திலும் இந்த திருமண அழைப்பிதழ் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு..யுபிஐ பணப்பரிமாற்ற சேவைக்கு கட்டணம் கிடையாது.. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்!