எவ்வளவு வயிற்றெரிச்சல்! தனது முகத்திரையை தானே கிழித்துக் கொண்ட அமித் ஷா! திருமாவளவன் விளாசல்!
அம்பேத்கரின் பெயரை உச்சரிப்பது பேஷன் என அமித் ஷா கூறியதற்கு திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சாவர்க்கரின் வாரிசுகளால் அம்பேத்கரைப் பற்றி நாடே பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், இதுவே சங்பரிவாரின் உண்மை முகம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா: அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் அடுத்த 7 ஜென்மத்திற்கு சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என விமர்சித்திருந்தார்.
இந்த பேச்சு நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெரும் புயலை கிளப்பியது. சர்சைக்குரிய இவரது பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல் உதயநிதி ஸ்டாலின் டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும் என்றார். இந்நிலையில் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்? என திருமாவளவன் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொன்ன பரபரப்பு தகவல்!
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வௌியிட்ட எக்ஸ் தளத்தில்: புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்? எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை #அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம்.
இதையும் படிங்க: அப்பாடா! நிம்மதி பெருமூச்சு விடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! என்ன காரணம்?
அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் உண்மையான எதிரிகள். இதனையே விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். சங்பரிவார்கள் புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள். புரட்சியாளர் அம்பேத்கர் "விசுவரூபம் " எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.