தமிழ்நாட்டின் முதல் 5 பணக்கார மாவட்டங்கள் இவை தான்.. கண்டிப்பா சென்னை, கோவை இல்லை..
ஆனால் தமிழ்நாட்டின் தமிழகத்தின் முதல் 10 பணக்கார மாவட்டங்களின் பட்டியலில் சென்னையும், இல்லை கோவை இல்லை.
சென்னை அல்லது கோவை தான் தமிழகத்தின் பணக்கார மாவட்டங்களாக இருக்கும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஏனெனில் இந்த மாவட்டங்களில் தான் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவை அதிகம். ஆனால் தமிழ்நாட்டின் தமிழகத்தின் முதல் 10 பணக்கார மாவட்டங்களின் பட்டியலில் சென்னையும், இல்லை கோவை இல்லை. எனில், தமிழகத்தின் பணக்கார மாவட்டம் எது? முதல் 5 பணக்கார மாவட்டங்களின் பட்டியலை பார்க்கலாம்.
இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. தொழில்துறை, ஏற்றுமதி, விவசாயம் என அனைத்திலும் தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதுதான் இதற்கு காரணம். தொழில்துறை, உற்பத்தி, ஆலைகள், ஏற்றுமதி, விவசாயம் என மாவட்டத்தின் வருமானத்தை வைத்தே ஒரு மாநிலத்தின் வருமானம் கணக்கிடப்படுகிறது. மொத்த வருமானத்தையும் ஒன்று கூட்டி அதனை அங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை கொண்டு வகுத்தால் சராசரி தனி நபர் வருமானம் தெரிந்துவிடும். அதில் எது மிகுதியாக இருக்கிறதே அதுவே பணக்கார மாவட்டம் என்று கருதப்படுகிறது.
சென்னை ஏன் முதலிடத்தில் இல்லை
பல்வேறு தொழில் துறை நிறுவனங்களும், தொழிற்சாலை, வெளிநாட்டு நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகளும், அதிக சம்பளம் பெற்று வாழும் மக்கள் சென்னையில் தான் அதிகம் இருக்கின்றனரே, ஏன் சென்னை முதலிடத்தில் வரவில்லை என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கலாம்.சென்னை எந்த அளவிற்கு வளமான மக்களை கொண்டுள்ளதோ அதே அளவிற்கு ஏழை மக்களையும் நடுத்தர மக்களையும் கொண்டுள்ளது. எனவே எல்லா வகையான மக்களும் அதிகமாக வாழ்வதால் சென்னையின் வாழ்வதால் தனி நபர் வருமானமும் குறைகிறது. சரி, தமிழகத்தின் பணக்கார மாவட்டம் எது?
அதற்கான பதில் கன்னியாகுமரி. ஆம். கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் மக்கள் தான் அதிக வசதியாக வாழுகின்றனர். தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் அதிகம் இருப்பது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான், அதே மாதிரி இந்த மாவட்ட மக்கள் கேரள அரசுப் பணிகளிலும் நிறைய பேர் பணிபுரிகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களின் அதிகமானோர் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் தான். மேலும் கன்னியாகுமரி மாவட்டம் ரப்பர் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது. தவிர, மீன்வளம், விவசாயம், சுற்றுலா என எல்லாவற்றிலும் கன்னியாகுமரி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரியின் தனிநபர் வருமானம் ரூ.81,094. எனவே தமிழகத்திலேயே பணக்கார மாவட்டம் கன்னியாகுமரி தான்.
இந்த பட்டியலில் 2-வது இடத்தில் இருப்பது திருப்பூர். இந்தியாவின் பின்னலாடை தொழில் மையமாக உள்ள திருப்பூரில், நாட்டின் பல மாநிலங்கள் மட்டுமின்றி இலங்கை மற்றும் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கிராமங்களால் சூழப்பட்ட ஒரு சிறிய நகரமாக இருந்த திருப்பூர் இப்போது இரண்டாவது பணக்கார மாவட்டமாக உருவெடுத்துள்ளது. திருப்பூரின் தனிநபர் வருமானம் ரூ.72,479 ஆகும்.
தமிழ்நாட்டின் பணக்கார மாவட்டங்களில் 3-வது இடத்தில் உள்ளது திருவள்ளூர். பெரும்பாலும் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளை நம்பியே திருவள்ளூர் மாவட்டத்தின் பொருளாதாரம் உள்ளது. இந்த மாவட்டத்தின் மொத்த தொழிலாளர்களில் சுமார் நாற்பத்தேழு சதவீதம் பேர் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அது மட்டுமே திருவள்ளூரின் வாழ்வாதாரம் இல்லை, ஆவடி, அம்பத்தூர் தொழில்பேட்டைகளில் இருக்கும் மெட்ராஸ் ரிஃபைனரீஸ், மெட்ராஸ் ஃபெர்டிளைசர்ஸ், மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ், MRF, அசோக் லெய்லேண்ட், பிரிட்டானியா, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் மாவட்டங்கள் திருவள்ளூரை மூன்றாவது பணக்கார மாவட்டமாக மாற்றியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் தனி நபர் வருமானம்m ரூ.70,778 ஆகும்.
தமிழ்நாட்டின் நான்காவது பணக்கார மாவட்டமாக விருதுநகர் உள்ளது. இந்த மாவட்டம் ரூ.70,689 தனி நபர் வருமானத்தை கொண்டுள்ளது. வறட்சியான மாவட்டங்களில் ஒன்றாக கருதப்படும் விருதுநகர், பணக்கார மாவட்டங்களில் நான்காவது இடத்தில் நம்மில் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், ஆயில், காபி, தானியங்கள் மற்றும் மிளகாய் உற்பத்தி செய்வதுடன், ஸ்பின்னிங் மில்கள், கைத்தறி ஆலைகளுடன் விருதுநகர் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவின் புனித நகரமாக கருதப்படும் காஞ்சிபுரத்தில் சுமார் 1000 கோயில்கள் உள்ளன. எனவே அது ஒரு சாதகமான வணிக தலமாகவும் மாறி வருகிறது. முக்கியமாக விவசாயம் மற்றும் பட்டு தொழில் துறைகள் காஞ்சிபுரத்தின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்றன. காஞ்சிபுரத்தின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் மற்றொரு முக்கிய தொழில் சுற்றுலாத் துறையாக இருக்கிறது. காஞ்சிபுரத்தின் தனிநபர் வருமானம் ரூ.70,667 ஆகும்.
இந்த பட்டியலில் 6-வது இடத்தில் கோவை உள்ளது கோவை மாவட்டத்தின் தனிநபர் வருமானம் ரூ..65,781 ஆகும். இதை தொடர்ந்து ரூ.65,011 தனிநபர் வருமானத்துடன் திருச்சி 7-வது இடத்தில் உள்ளது. ரூ 63,467 தனி நபர் வருமானம் கொண்ட தூத்துக்குடி 8-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் ஜவுளி நகரமாக கருதப்படும் ஈரோடு 9-வது இடத்தில் உள்ளது. ஈரோட்டின் தனிநபர் வருமானம் ரூ.61,631 ஆகும்.
ரூ.61,181 தனிநபர் வருமானத்துடன் கரூர் 10-வது பணக்கார மாவட்டமாக உள்ளது. நாமக்கல் மாவட்டம் இதில் 11-வது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் தனிநபர் வருமானம் ரூ.58,133 ஆகும். இந்த பட்டியலில் தலைநகர்12 ஆம் இடத்தில் உள்ளது. சென்னையின் தனிநபர் வருமானம் ரூ.57,706 ஆகும்.
- richest district
- richest district in tamil nadu
- richest district in tamilnadu
- richest districts in tamil nadu
- richest districts in tamilnadu
- richest districts of tamil nadu
- richest state in india
- tamilnadu top 10 richest district
- top 10 r richest district in tamilnadu
- top 4 richest districts in tamilnadu
- top 5 richest district in tamilnadu
- top district in tamilnadu
- top districts in tamilnadu
- top richest tamilnadu
- top ten richest districts in tamil nadu