நடைபாதையில் தூங்கியவர் மீது ஏறி, இறங்கிய கார்

சென்னையில் மது போதையில் நடைபாதையில் படுத்து தூங்கிய இளைஞர் மீது கார் ஏறி, இறங்கியதில் சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விபத்தை ஏற்படுத்திய எம்பியின் மகள் ஜாமினில் வெளியே வந்தார்.  சென்னை பெசன்ட் நகர் ஓடக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 22 வயதாகும் சூர்யா, பெயிண்டராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம்  பெசன்ட் நகர்  காலாக்ஷேத்ரா காலனி வரதராஜ் சாலை நடைபாதை அருகே மது போதையில் தூங்கியுள்ளார்.  அப்போது அந்த அவ்வழியாக சென்ற கார் சாலை ஓரம் மது போதையில் விழுந்து கிடந்த சூர்யாவின் மீது ஏறி இறங்கியதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.

 இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் சூர்யாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூர்யா சில மணி நேரத்திற்குள்ளாக சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்து உள்ளார். விபத்தை ஏற்படுத்திய காரில் இரு பெண்கள் வந்ததாக வந்ததாகவும். அதில் காரை இயக்கிய பெண் சம்பவ இடத்திலிருந்து காருடன் தப்பி ஓடியதாக கூறப்படுகின்றது. 

CRIME : அடுத்தடுத்து பைக் திருட்டு...கோயிலில் நகை கொள்ளை- வசமாக சிக்கிய கோயில் அர்ச்சகர்- தட்டி தூக்கிய போலீஸ்

ஜாமினில் வெளிவந்த எம்பியின் மகள்

உயிரிழந்த சூர்யாவின் உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த பெசன்ட் நகர்  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை போலீசார் ஆய்வு செய்தனர். இருந்த போதும் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பெண் கைது செய்யப்படவில்லையெனவும் உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து பெசன்ட் நகரில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில் ஆந்திர எம் பி  மகள் கைது செய்யப்பட்டார். அவர் மீது கவனக்குறைவாக கார் ஓட்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர். 

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ராஜ்யசபா எம்பி பீடா மஸ்தான் ராவின் மகள் பீடா மாதுரி என்பது தெரிய வந்தது. சென்னை பெசன்ட் நகரில் வசித்து வரும் இவர், பாண்டிச்சேரியில் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார் எனவும் கூறப்படுகிறது. கண்காணிப்பு கேமரா பதிவு  உதவியுடன் வாகனத்தை கண்டுபிடித்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஆந்திரா எம் பி யின் மகள் பீடா மாதிரியாய் அடையாறு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து காவல்நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

Coimbatore Robbery: சினிமா காட்சிகளை மிஞ்சிய கோவை கொள்ளை முயற்சி சம்பவம்; இராணுவ வீரர் அதிரடி கைது