Asianet News TamilAsianet News Tamil

CRIME : அடுத்தடுத்து பைக் திருட்டு...கோயிலில் நகை கொள்ளை- வசமாக சிக்கிய கோயில் அர்ச்சகர்- தட்டி தூக்கிய போலீஸ்

பைக் மற்றும் சிவன் கோயிலில் இருந்து நகைகளை திருடிய அர்ச்சகரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். 

Police have arrested a temple priest who was involved in two wheeler theft KAK
Author
First Published Jun 18, 2024, 7:42 AM IST | Last Updated Jun 18, 2024, 7:42 AM IST

தொடரும் பைக் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகர பகுதியில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில் சங்கராபுரம் காவல் நிலைய போலீசார் சங்கராபுரம் நகரப்பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி இருசக்கர வாகன கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

நேற்று இரவு சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொளத்தூர் சங்கராபுரம் - திருக்கோவிலூர் சாலையில் வாகன தணிக்கையின் போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கணியாமூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

Police have arrested a temple priest who was involved in two wheeler theft KAK

கோயில் அர்ச்சகர் கைது

ஆனால் ராஜேஷ் உரிய பதில் அளிக்காமல் முன்னுக்கு பின் பதிலளித்துள்ளார். இதனால் அவர் மீது  சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் ராஜேஷ் கனியாமூர் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வருவதாகவும், சங்கராபுரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததையும் ஒப்புக்கொண்டார். மேலும் தொடர் விசாரணையில்,  

பாசார் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் சிவன் கழுத்தில் இருந்த ஒன்றரைப் பவுன் தாலியை திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கோயில் அர்ச்சகரான ராஜேஷ் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 4 லட்சம் மதிப்பிலான ஆறு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Coimbatore Robbery: சினிமா காட்சிகளை மிஞ்சிய கோவை கொள்ளை முயற்சி சம்பவம்; இராணுவ வீரர் அதிரடி கைது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios