பி.எட் பிடிப்பிற்கான வினாத்தாள் 2000 ரூபாய்க்கு விற்பனை.! வெளியான ஷாக் தகவல்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பி.எட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததால், பல்கலைக்கழக பதிவாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, புதிய பதிவாளர் நியமிக்கப்பட்டார்.
வினாத்தாள் வெளியானது
பி.எட் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று கடந்த 27ஆம் தேதி தொடங்கிய தேர்வு அடுத்த வாரம் வரை நடைபெறுகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் கல்லூரிகளில் பி.எட் (B.Ed) இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இன்று நடைபெறவிருந்த படைப்புத்திறனும் உள்ளடக்க கல்வியும் என்ற தேர்வு நடைபெற இருந்தது.
மாணவர்கள் தேர்வுக்கு தயாராக இருந்த நிலையில் வினாத்தாள் லீக் ஆனதாக தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்நாடு உயர்கல்வி துறை காலை 10மணிக்கு நடைபெற இருந்த தேர்வுக்கான வினாத்தாள் திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து புதிய வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன் படி புதிய வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
2ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை
இதனிடையே வினாத்தாள் வெளியானது தொடர்பாக உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் படி. ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இருப்பவர்களே வினாத்தாளை 2000 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. செமஸ்டர் தேர்வு தொடங்கிய கடந்த 27ஆம் தேதி முதலே கேள்வித்தாள்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது. உடனடியாக புதிய பதிவாளராக ராஜசேகர் என்பவரை நியமனம் செய்யப்பட்டார்.
சென்னை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு! இன்று போக்குவரத்து மாற்றம்! எந்த பகுதியில் தெரியுமா?
பதிவாளர் நீக்கம்
இந்தநிலையில் இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கி வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே இதுபோன்ற வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் பிரதான காரணமாக அமைந்திருப்பதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுவதாக கூறியுள்ளார்.
எனவே, பி.எட் (B.Ed) தேர்வுக்கான வினாத்தாள் கசிவு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதோடு, தமிழக ஆளுநரிடம் கலந்து ஆலோசித்து பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.