JOB : மாதம் 12ஆயிரம் உதவித்தொகையோடு 1500 மகளிர்களுக்கு பயிற்சியோடு வேலை.! உடனே விண்ணிப்பிக்க அரசு அழைப்பு
தமிழக அரசு, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 1500 பெண்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளது. +2 / ITI தேர்ச்சி பெற்ற 18 - 21 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாதம் ரூ.12,000 உதவித்தொகையுடன் உணவு, தங்குமிடம் போன்ற சலுகைகளும் வழங்கப்படும்.
மகளிர்களுக்கு வேலை வாய்ப்பு
படித்த படிப்பிற்கு உரிய வேலை கிடைக்கவில்லையென இளைஞர்கள் தவித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பாக தனியார் நிறுவனங்களோடு இணைந்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பல மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது . அதன் ஒரு பகுதியாக மகளிர்களுக்கு வேலை வழங்கும் வகையில் சிறப்பு முகாம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மகளிர் திட்டம் மற்றும் டாட்டா எலேக்ட்ரோனிக்ஸ் நிறுவனம் (TATA ELECTRONICS) இணைந்து மகளிர்க்காக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளது.
இந்தியன் வங்கியில் 300 காலியிடங்கள்; டிகிரி இருந்தால் உடனே அப்ளை பண்ணுங்க!
பணியின் தன்மை
தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டம்(NAPS):
கல்வி தகுதி
+2 தேர்ச்சி/ITI பயின்ற பெண்கள் (புதியவர்கள்) 18 - 21 வரை உள்ள பெண்கள்.
தேவைப்படும் பணியாளர் எண்ணிக்கை
1500 நபர்கள்
பயிற்சிக்காலம்
12 மாதங்கள்
உதவித்தொகை
Rs.12,000/- மாதந்தோறும்
இதர சலுகைகள்
உணவு, போக்குவரத்து மற்றும் தங்கும் வசதி.
வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ள தேதிகள்
29.08.24, 30.08.24 (வியாழன், வெள்ளி)
வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் மாவட்டம்
தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம். இந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் செல்லவும். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி இச்சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், பங்கேற்று பயன்பெறுமாறு அந்தந்த மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள மாணவியர்கள் / பெண்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறையின் ஆணையர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.