NIA RAID : நாம் தமிழர் கட்சியை குறிவைத்த என்ஐஏ... லண்டனில் யாருடன் தொடர்பு- திடீர் ரெய்டுக்கு பின்னனி என்ன.?
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், சோதனைக்கான பின்னனி வெளியாகியுள்ளது. விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளோடு தொடர்பில் இருந்ததாக தகவல் கிடைத்ததை வைத்து சொதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
நாம் தமிழர் நிர்வாகிகளை குறி வைத்த என்ஐஏ
இந்தியாவில் தீவிரவாதத்தை தடுக்கவும், முறைகேடான வெளிநாட்டு பண பரிவர்த்தனையைகண்டறியவும் நாடு முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் பல இடங்களில் ஆவணங்களை கைப்பற்றி குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த விஷ்ணு, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த இசை மதிவாணன் ஆகியோர் வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை சோதனை செய்தனர்.
லண்டனில் யாருடன் தொடர்பு.?
மேலும் நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக் நேரில் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைக்கு முக்கிய காரணமாக லண்டனில் உள்ள விடுதலை புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர் உடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் பிரத்யேக செயலி மூலம் தொடர்பில் இருந்தது என்.ஐ.ஏ கண்களில் சிக்கியதால் சோதனை என தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்கும் வகையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாகவும் தெரிகிறது. இந்த சோதனையின் போது தடை செய்யப்பட்ட அமைப்புகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றனரா என்ற சந்தேகத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்