நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளை சுற்றி வளைத்த என்ஐஏ... சாட்டை துரைமுருகன் வீட்டில் சோதனையால் பரபரப்பு
தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து நிதிபெற்றது தொடர்பாக சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை
தீவிரவாதத்தை தடுப்பது. வெளிநாடுகளில் இருந்து தவறான முறையில் நிதி பெறுவது என குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து என்ஐஏ சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் பல இடங்களில் சோதனை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து வருகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து நிதிபெற்றது தொடர்பாக சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ
மேலும் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தாக தகவல் கிடைத்தையடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் நெருங்கிய நபரும், யூடிப்பருமான சாட்டை துரைமுருகனின் திருச்சி சண்முகா நகரில் உள்ள வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இதே போல சென்னை, கோவை, சிவகங்கை, தென்காசி, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலணாய்வு முகமையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சிவங்கை மாவட்டத்தை சேர்ந்த விஷ்ணு, ராஜகாளையத்தை சேர்ந்த மதிவாணன் ஆகியோர் விடுகளிலும் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்