வில்லிவாக்கத்தில் தேர்தல் பணிமனையைத் திறந்து வைத்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இத்தொகுதி திமுகவிற்கு சாதகமானது என்றும், கடந்த முறையை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
வில்லிவாக்கத்தில் தேர்தல் பணிமனை திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு: வில்லிவாக்கத்தில் 255 பாகங்க ஒரு இலட்சத்து 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர்களாக உள்ளனர். இதில் பெண் வாக்காளர்கள் அதிகமுள்ளனர். இங்கு திமுகவிற்கு சாதகமான தொகுதி, வில்லிவாக்கம் தொகுதி பிரிக்கப்பட்ட பின்னர் ஒரு முறையை தவிர அனைத்து முறையும் திமுக தான் வென்றுள்ளது. சென்னை கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் தேர்தல் பணி என அனைத்தையும் இங்கிருந்து தான் துவங்குகிறோம். வெற்றியினையும் இங்கிருந்து துவங்குவோம் என்று உறுதியோடு சொல்கிறோம்.
பலர் அதிகார ஆசையோடு மமதையோடு எதை வேண்டுமானால் எதை கொடுத்தும் வாங்கி விடாலாம் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இது வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அனைவரையும் மதிக்கவேண்டும் இவர்களுகெல்லாம் தக்கபாடம் வில்லிவாக்கத்தில் புகட்டப்படும். ஒரு காலத்தில் லீடர் லீடர் என்று கைக்கட்டிக்கொண்டு நின்றவர் இன்று எங்களுக்கு அறிவு பரிசோதனை செய்யவேண்டும் என்கிறார். முதலில் இவருக்கு தான் கீழ்பாக்கம் மனநல மையத்தில் பரிசோதனை செய்யவேண்டும்.
பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆற்றல்மிக்க தலைவர் அவரை விமர்சிப்பவர்களை தன் தாயே தடுத்தாலும் திமுக தொண்டன் எதிர்ப்பான். பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும் நாங்கள் யாரையும் சவலாக நினைக்கவில்லை. எங்களுடைய கொள்கை கோட்பாடுகள் திட்டங்கள் மக்களோடு உள்ள தொடர்புகள் இவற்றை நம்பி தான் உள்ளோம். பேய் பிசாசினை பார்த்து பயப்படமாட்டோம். மக்கள் சக்தி யார் பின்னால் இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டும்
கூவி கூவி அழைத்தாலும் கூட்டணிக்கு யாரும் வரவில்லை. அவர்களுக்கு அரசியல் ஞானம் பெற்றவர் திமுக தலைவர். அரசியல் நாகரீகத்தோடு செல்பவர்களுக்கு நாங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் நாகரீகம் தெரியாவதற்களுக்கு பதில் சொல்லவில்லை என்றால் பயம் என்பார்கள். இந்த கத்துகுட்டிகளுக்கு எதாவது ஒரு விதத்தில் பதில் சொல்லிவிட வேண்டும். திமுக கூட்டணி உறுதியான வலுவான கூட்டணி. சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள தொகுதிகளை கடந்த முறையை விட கூடுதல் வாக்கு சதவீதத்தோடு கைப்பற்றுவோம் என தெரிவித்துள்ளார்.


