Asianet News TamilAsianet News Tamil

நீட் மசோதாவுக்கும், ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி

நீட் மசோதாவுக்கும், ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது ஒப்புதல் இனி அவசியமும் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

The NEET Bill has nothing to do with the Governor says Minister Ma Subramanian
Author
First Published Aug 13, 2023, 10:23 PM IST

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கண் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளிகளின் கவனிப்பு பிரிவு, ஹோமியோபதி சிகிச்சை பிரிவு ஆகிய கட்டிடங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. 

புதிய கட்டிடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பிறகு செய்தியாளர்களடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் ‘ஹெல்த் வாக்’ முறை விரைவில் தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சி பாதையை மேம்படுத்தி, இருபுறமும் மரங்கள் நட்டு, இருக்கைகள் அமைத்து, நடைபயிற்சியின் விழிப்புணர்வு பதாகைகள் அமைக்கப்படும். இத்திட்டத்தை தமிழக முதல்வர் விரைவில் தொடங்கிவைக்க உள்ளார்.

நீட் தேர்வு விலக்கு பெற்றே ஆக வேண்டும் என்பது தமிழக மக்களின் எண்ணம். அதை நிறைவேற்ற தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தினார். மசோதாவை திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. வேறு வழியின்றி ஆளுநர் அந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பிவைத்தார்.

குடியரசு தலைவர் அதை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்தார். உள்துறை அமைச்சகம் தமிழகத்தில் உள்ள ஆயுஷ் துறை, கல்வித்துறை, சுகாதாரத் துறை ஆகிய துறைகளுக்கு சில விளக்கங்களை கேட்டுள்ளது. அவற்றுக்கு சரியான பதிலை அளித்துள்ளோம். இந்த மசோதா இப்போதும் உயிரோட்டத்துடன் உள்ளது.

இந்நிலையில் தமிழக ஆளுநர் நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கையெழுத்திடமாட்டேன் எனக் கூறியுள்ளார். இனிமேல் நீட் மசோதாவுக்கும், ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது ஒப்புதல் இனி அவசியமும் இல்லை. இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்திடமாட்டேன் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயல்.

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால் அந்த தகவலை ஆளுநருக்கு தெரிவிப்பார். இனி எந்த வகையிலும் ஆளுநருக்கும், நீட் விலக்கு மசோதாவுக்கும் தொடர்பு இல்லை. அரசுடன் இணைந்து பயணிப்பதுதான் ஆளுநரின் கடமை” என்று கூறினார்.

Recharge Plan : ஒரே ரீசார்ஜ்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. இவ்வளவு கம்மி விலைக்கா? முழு விபரம் இதோ !!

Follow Us:
Download App:
  • android
  • ios