Asianet News TamilAsianet News Tamil

ரயிலில் அழைத்து செல்லாத பெற்றோர்.. ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவன்- போடியில் நடைபெற்ற வேதனை

போடியில் புதிதாக ரயில் சேவை தொடங்கிய நிலையில், ரயிலில் பெற்றோர் அழைத்து செல்லாத ஏக்கத்தில் மாணவன் ஒருவன் ரயில் மீதான பிரியத்தை கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The incident of suicide of a student due to not being able to travel by train has caused tragedy in Theni KAK
Author
First Published Oct 11, 2023, 12:44 PM IST | Last Updated Oct 11, 2023, 12:44 PM IST

மக்களின் தேவைக்கு ஏற்ப போக்குவரத்து வசதியானது மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் பலாண்டுகாலமாக இயங்கி வந்த ரயில் சேவை அகல ரயில்பாதை திட்டத்திற்காக நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக தேனிக்கு செல்ல ரயில் இல்லாத நிலையில் பேருந்துகளிலேயே மக்கள் சென்று வரும் நிலை இருந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போடிநாயக்கனூருக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டது.

இந்த ரயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் மதுரைக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் ரயிலில் பயணம் செய்ய முடியாத ஏக்கத்தில் மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தேனி மாவட்டம் போடி கீழத்தெரு பேச்சியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் ராமகிருஷ்ணன், ஜெயா தம்பதியர் இவர்களுக்கு  முத்து,பாலாஜி இரு மகன்கள் உள்ளனர்.

The incident of suicide of a student due to not being able to travel by train has caused tragedy in Theni KAK

 தந்தை ராமகிருஷ்ணன் கூலி வேலை செய்கிறார். தாய்  ஜெயா ஏலக்காய் கடைக்கு வேலைக்கு செல்கிறார். இளைய மகன் பாலாஜி 9ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத நிலையில் வீட்டில் இருந்துள்ளார். போடி  ரயில் நிலையத்தை நாள்தோறும் சுற்றி திரிந்து வந்துள்ளார். இந்நநிலையில் ரயில் சேவை துவங்கியதிலிருந்து ரயில் பயணிகள் குழந்தைகளுடன் சென்று வருவதை நாள்தோறும் கண்டு வந்துள்ளார். ரயில் பயணிகள் செல்வதைப் போல் தமது பெற்றோரும் சென்னை. மதுரைக்கு அழைத்து செல்ல அடிக்கடி அவர்களிடம் வற்புறுத்தி வந்துள்ளார்.ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் செல்வதை கண்டு தானும்  பெற்றோருடன் பயணிக்க வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருந்து வந்துள்ளார்.

The incident of suicide of a student due to not being able to travel by train has caused tragedy in Theni KAK

பெற்றோர்கள் இருவரும் நாள் தோறும் கூலி வேலைக்கு சென்று விடுவதால் பாலாஜியின் ஆசையை புரிந்து கொள்ளாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (9ஆம் தேதி)  பாலாஜி ரயில் மீது தன் கொண்ட ஏக்கத்தை உருக்கமான கடிதமாக எழுதி வைத்து அண்ணனையாவது நன்றாகப் பார்த்து கொள்ளுங்கள் என கூறி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  தனது பணியை முடித்து வீட்டை திறந்து பார்த்த போது சேலையால் தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் ஜெயா.  இதனைத் தொடர்ந்து போடி நகர் காவல் துறையினர் பாலாஜியின் பிரேதத்தை கைப்பற்றி போடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுமதித்து விசாரணை மேற்கொண்டனர். 

The incident of suicide of a student due to not being able to travel by train has caused tragedy in Theni KAK

விசாரணையில் மாணவன் கடிதம் எழுதி வைத்ததை கைப்பற்றி பெற்றோர்களுடன் ரயில் பயணம் செய்ய முடியாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யபட்டு பாலாஜியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அடக்கம் செய்யப்பட்டது. ரயில் மீது கொண்டுள்ள அதீத ஆசை ஏக்கம் காரணமாக மாணவன் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு போடி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

மதுபோதையில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து? மற்றொரு பேருந்தில் மோதி 10 பயணிகள் படுகாயம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios