Asianet News TamilAsianet News Tamil

மதுபோதையில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து? மற்றொரு பேருந்தில் மோதி 10 பயணிகள் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மீது மற்றொரு அரசுப் பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் 10 பயணிகள் காயமடைந்தனர்.

10 passengers injured while 2 government bus hit at palladam bus stand in tirupur district vel
Author
First Published Oct 11, 2023, 10:20 AM IST | Last Updated Oct 11, 2023, 10:22 AM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மற்றும் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் பல்லடம் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் நுழைய முயன்றன. அப்போது ஒரு பேருந்தின் மீது மற்றொரு பேருந்து நேருக்கு நேராக மோதி விபத்து  ஏற்பட்டது. 

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பல்லடம் காவல் துறையினர் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த பயணிகளை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இரண்டு பேருந்துகளை பறிமுதல் செய்து விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி ஓட்டுநர் படுகாயம்; அதிகாரிகள் விசாரணை

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பச்சை நிற அரசு பேருந்தை இயக்கி வந்தது சரவணன் என்பதும், மதுரையில் இருந்து தேனி செல்லும் பேருந்தை அப்துல் காதர் இயக்கி வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே அரசுப்பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், அதனால் தான் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் தலைமறைவாகிவிட்டதாகவும் பேருந்தில் பயணித்தவர்கள் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios