பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி ஓட்டுநர் படுகாயம்; அதிகாரிகள் விசாரணை

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது எதிர் திசையில் வந்த லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.

lorry driver highly injured while two lorry hit in thoothukudi district vel

நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியைச் சேர்ந்தவர்  நடராஜ். லாரி ஓட்டுநரான இவர் இன்று தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு ‌ லாரியில் உப்பு லோடு ஏற்றி சென்றுள்ளார்.‌ தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தாப்பாத்தி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் அருகே சென்று போது லாரி திடீரென பழுதாகி உள்ளது. 

இதனைத் தொடர்ந்து வேறு வழயின்றி நடராஜ் சாலையில் லாரியை நிறுத்தியுள்ளார்.‌ இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து கரி ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்ற லாரி, பழுதாகி நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கரிலோடு ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநர் தூத்துக்குடி முள்ளக்காட்டினை சேர்ந்த செல்லமுத்து ராஜ் படுகாயமடைந்தார்.

மாவட்ட தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; கன்னியாகுமரியில் உச்சக்கட்ட பரபரப்பு

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இது குறித்து தகவல் தகவல் அறிந்த காவல் துறையினர் விரைந்து சென்று காயமடைந்த செல்வ முத்துராஜை மீட்டு,  எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து மாசார்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios