"தேசத்தை மதிக்காத தலைவர், இந்த ஆணவம் நல்லதல்ல" - ஸ்டாலினுக்கு எதிராக இறங்கி அடிக்கும் ஆர்.என் ரவி

தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்படாத விவகாரத்தில் ஆளுநர் வெளியேறியதும், அதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் பரஸ்பரம் குழப்பங்களில் ஈடுபட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கீதம் இசைக்கப்படாதது அரசியலமைப்பு அவமதிப்பு என ஆளுநர் கூற, முதல்வர் அதை மறுத்துள்ளார்.

The governor accused Stalin of being a leader who did not accept and respect Bharat as a nation and its constitution KAK

சட்டப்பேரவை- ஆளுநர் ரவி

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லையென கூறி  ஆளுநர் ரவி வெளியேறினார். இதனால் பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், தமிழக சட்டசபையில் மீண்டும் பாரத அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது.  தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படைக் கடமையாகும் என ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது. 

The governor accused Stalin of being a leader who did not accept and respect Bharat as a nation and its constitution KAK

முதல்வர் -ஆளுநர் மோதல்

இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில்,  தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என கூறியிருந்தார். கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது என ஆவேசமாக கூறியிருந்தார்.  இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார். 

முதல்வருக்கு ஆளுநர் கண்டனம்

பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின்  உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி. இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios