வேலை தேடுறீங்களா.? 8ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.!தமிழக அரசு ஏற்பாடு செய்த வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

வேலைவாய்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தங்களது பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளதாகவும், இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு. 12-ஆம் வகுப்பு. ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

The District Collector of Chennai has announced that an employment camp will be held on the 21st to provide employment to the youth KAK

தனியார் துறை வேலைவாய்ப்பு

படித்த படிப்பிற்கு வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவிடும் வகையில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 21.06.2024 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. 

Heavy Rain : தமிழகத்தில் மிக கனமழைக்கு எச்சரிக்கை.! எப்போ.? எந்த மாவட்டங்கள் தெரியுமா.? வானிலை மையம் அலர்ட்

The District Collector of Chennai has announced that an employment camp will be held on the 21st to provide employment to the youth KAK

8ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு. 12-ஆம் வகுப்பு. ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. 

The District Collector of Chennai has announced that an employment camp will be held on the 21st to provide employment to the youth KAK

20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு

வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) பதிவேற்றம் செய்ய வேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார். 

Arrest : பிரபல பல்கலை. கழகத்தின் பெயரில் போலி கல்வி சான்றிதழ் அச்சடித்த தீட்சிதர்.!! தட்டி தூக்கிய போலீஸ்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios