இன்று தொடங்குகிறது சென்னை புத்தக கண்காட்சி.! நுழைவு கட்டணம் எவ்வளவு.? எத்தனை நாட்களுக்கு நடைபெறுகிறது.?
சென்னை புத்தக கண்காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறவுள்ளன. இதில் நுழைவு கட்டணமாக 10 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறியவர்களுக்கு கட்டணமின்றி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று தொடங்குகிறது புத்தக கண்காட்சி
47 ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் (03/01/2024 )புதன்கிழமை இன்று மாலை அமைச்சர் உதயிநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த கண்காட்சி வருகிற 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இந்த விழாவில் முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி வழங்கும் விருதுகளையும் வழங்கவுள்ளார். இந்த புத்தக கண்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ளது. மற்ற நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
19 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி
19 நாட்கள் நடைபெறவுள்ள புத்தகக் காட்சியில் நடைபெறுகிறது மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நூல்களுக்கும், அனைத்து அரங்கிலும் வழங்கப்படுகிறது. 10% தள்ளுபடியும் வழங்கப்படவுள்ளது. பபாசியில் உறுப்பினரல்லாதவர்கள் விண்ணப்பித்த அனைவருக்கும் இந்த ஆண்டு 150க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் தலா ஒரு அரங்குகள் ஒதுக்கப் பட்டுள்ளது. தென்னிந்திய புத்த விஹார் அறக்கட்டளை, வாய்ஸ் ஆஃப் புத்தா, எழுச்சி பதிப்பகம், தடாகம், திருநங்கை பிரஸ் LLP ஆகிய சிறப்பு வாய்ந்த அமைப்புகளுக்கும் அரங்கு அமைக்கின்றார்கள். பூவுலகின் நண்பர்கள், காக்கைக்கூடு, இயல்வாகை போன்ற சூழலியல் சார்ந்த அரங்குகளும் பெருமளவில் அமைக்கப்பட்டுள்ளது.
நுழைவு கட்டணம் எவ்வளவு
தமிழ்நாடு கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு அவர்களின் உழைப்பினால் உருவாக்கப்பட்ட சிறப்புத்தன்மை வாய்ந்த கைத்திறப் பொருட்களை உலகம் முழுதிலிருந்தும் புத்தகக் காட்சிக் லட்சக்கணக்கான புத்தக பிரியர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புத்தக கண்காட்சியில் நுழைவு கட்டணமாக 10 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறியவர்களுக்கு கட்டணமின்றியும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
பிரதமரை சந்திக்க இன்று டெல்லி செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.! என்ன காரணம் தெரியுமா.?