Asianet News TamilAsianet News Tamil

தஞ்சையில் திடீர் போக்குவரத்து மாற்றம்; பொதுமக்கள் அவதி

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெறுவதால் முன் அறிவிப்பு இல்லாமல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவ மாணவிகள், அலுவலகம் செல்பவர்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

thanjavur main road closed without announcement
Author
First Published Feb 6, 2023, 11:59 AM IST

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது. இன்று தொடங்கி 10ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகின்ற இத்தேர்வில் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர். நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டாயிரம் பேர் கலந்து கொள்கின்றனர். 

நாள் ஒன்றுக்கு 400 பேர் வீதம் இத்தேர்வில் கலந்து கொள்கின்றனர். இதற்காக நீதிமன்ற சாலை எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் காவலர்கள் தடுப்புகள் அமைத்து போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளனர். இதனை அறியாத பள்ளி, கல்லூரி மாணவ. மாணவிகள். அலுவலகம் செல்பவர்கள் என அனைவரும் மாற்றுபாதையில் திருப்பி அனுப்பப்பட்டனர். 

இதனால் மாணவ, மாணவிகள். அலுவலகம் செல்பவர்கள் சுமார் இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு சுற்றிக் கொண்டு மாற்றுப் பாதை வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மின் இணைப்புடன் பொய்யாக இணைக்கப்படும் ஆதார் எண்கள்; வீட்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி

சட்டத்தை நிலைநாட்ட பணியாற்றும் காவல் துறையினரே தங்கள் தேவைகளுக்காக சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது. முறையான அறிவிப்பு வெளியிட்ட பின்னர் சாலையை மூடியிருக்கலம் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

மகளுடன் தாய் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை முயற்சி: விருதுநகரில் பரபரப்பு 

Follow Us:
Download App:
  • android
  • ios