Asianet News TamilAsianet News Tamil

மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் கன்ஃபார்ம்.. புயலின் பாதையை பாருங்க.. தமிழ்நாடு வெதர்மேன் ட்வீட்..

வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் அதிக கனமழையை தரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது X வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்

Tamilnadu weatherman Pradeep john tweet about michaung cyclone path and heavy rains Rya
Author
First Published Dec 1, 2023, 2:35 PM IST

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இது தற்போது புதுச்சேரிக்கு 760 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு 780 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 3-ம் தேதி புயாலாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது.

இந்த புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 4-ம் தேதி  வட தமிழகம் – மசூலிப்பட்டனம் இடையே கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வரையிலும் அவ்வப்போது 80 கி.மீ வரையிலும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது X வலைதள பக்கத்தில் இந்த புயல் அதிக கனமழையை தரும் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் பதிவில் “ கடந்த 20 ஆண்டுகளில் தென் கிழக்கு அல்லது தெற்கில் இருந்து மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்த புயல்கள் அதிக மழையை கொடுத்துள்ளன. 2006-ம் ஆண்டு ஓக்னி புயல், 2020-ம் ஆண்டு நிவர் புயல் 2008-ம் ஆண்டு நிஷா புயல் ஆகியவை பலத்த காற்றை காட்டிலும் அதிக கனமழையை கொடுத்தன.” என்று பதிவிட்டுள்ளார்.

 

மேலும் அவரின் மற்றொரு பதிவில் “ கடந்த 15 ஆண்டுகளில்  தமிழகக் கடற்கரையை நோக்கி செங்குத்தாக கடந்த வர்தா, தானே அல்லது கஜா போன்ற புயல்கள் பலத்த காற்றை கொடுத்தன. ஆனால் மழை குறைவாகவே இருந்தது..” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் “ இந்த புயலின் பாதை மற்றும் பாதை கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. GFS மாடல் பர்மா, ஒடிசா பகுதிகளை கணித்த நிலையில், கடைசியாக புயலின் பாதையை சென்னை / வட தமிழ்நாட்டிற்கு அருகே கணித்துள்ளது. இதில் சிறப்பு என்னவென்றா இந்த புயல் மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்கிறது. இதுவரை மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்த புயல்கள் கடலோர பகுதிகளில் மிக கனமழையை கொடுத்துள்ளது.

எனவே இந்த புயல் வட தமிழகம், சென்னைக்கு அருகே கரையை கடப்பதால் மிக கனமழையை எதிர்பார்க்கலாம். வட தமிழக மாவட்டங்களுக்கு டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்படலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios