Asianet News TamilAsianet News Tamil

அனைவருக்கும் வீடு திட்டத்தில் இந்திய அளவில் தமிழகம் 3வது இடம்... விருது பெற்றார் அமைச்சர் அன்பரசன்!!

அனைவருக்கும் வீடு திட்டத்தில் இந்திய அளவில் தமிழகம் 3 ஆவது இடம் பிடித்ததை அடுத்து பிரதமர் மோடியிடமிருந்து அமைச்சர் அன்பரசன் விருதினை பெற்றார். 

tamilnadu ranks third in India in Housing for All project and minister anbarasan got the award
Author
First Published Oct 20, 2022, 6:56 PM IST

அனைவருக்கும் வீடு திட்டத்தில் இந்திய அளவில் தமிழகம் 3 ஆவது இடம் பிடித்ததை அடுத்து பிரதமர் மோடியிடமிருந்து அமைச்சர் அன்பரசன் விருதினை பெற்றார். மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைவருக்கும் வீடு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டமைக்கு தேசிய அளவில் 3 ஆம் இடம் பிடித்த தமிழகத்திற்கு, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியிடமிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் விருதினை பெற்றார்.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவராக வாய்ப்பு வந்தும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்.

இந்தியப் பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தை (நகர்ப்புறம்) சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பயனாளிகள் அங்கீகரிப்பதலுக்காக மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறையால், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா விருதுகள் - 2021 மற்றும் 150 நாட்கள் சவால்கள் என்ற அடிப்படையில், மாநிலம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான விருதுகளும், சிறப்புப் பிரிவு விருதுகளும், பயனாளிகளுக்கான விருதுகள் என மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: பொதுமேடையில் அரசியல் நோக்கத்திற்காக தவறான தகவல்களை கூறுகிறார் ஆளுநர்.. சட்டசபையில் கொந்தளித்த Dr.எழிலன்.

மேற்கண்ட விருதுகளில் சிறப்பாக செயல்பட்ட மாநிலம் என்ற பிரிவில் தமிழகம் 3 ஆவது இடத்தையும், மாநகராட்சிகளில் மதுரை மாநகராட்சிக்கு 3 ஆவது இடமும், பேரூராட்சிகள் பிரிவில் கோவை மாவட்டம், பெரிய நெகமம் பேரூராட்சிக்கு 5 ஆவது இடமும் பிடித்து விருதுகள் பெற்றுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios