பொதுமேடையில் அரசியல் நோக்கத்திற்காக தவறான தகவல்களை கூறுகிறார் ஆளுநர்.. சட்டசபையில் கொந்தளித்த Dr.எழிலன்.
தமிழ்நாட்டில் தலித் மக்களின் கல்வி கற்றோர் விகிதம் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பொதுமேடைகளில் தவறான தகவல்களை பகிர்ந்து வருகிறார் என திமுக ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் தலித் மக்களின் கல்வி கற்றோர் விகிதம் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பொதுமேடைகளில் தவறான தகவல்களை பகிர்ந்து வருகிறார் என திமுக ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர் கூறியதுபோல தலித் மக்களின் கல்வி விகிதம் 13 முதல் 14 சதவீதம் அல்ல 39.6 சதவீதம் என்றும் இது தேசிய அளவில் 23.4 சதவீதம் என இந்து நாளேட்டில் செய்தியை மேற்கோள்காட்டி அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் ஹரிஜன் சேவா சங்கத்தின் 90 ஆவது ஆண்டு விழா மற்றும் இந்தியா சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டில் உள்ள எஸ்ஆர்எஸ் சர்வோதயா பள்ளியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர். என் ரவி, ஆங்கிலேயர்கள் நமது இந்திய நாட்டை சாதி, மதம், இனம், மொழி என பிரித்தார்கள். அவர்களை எதிர்த்து போராடியவர்தான் நமது மகாத்மா காந்தி, அவரால் தொடங்கப்பட்டதுதான் ஹரிஜன சங்கம். இந்தியர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தவர் மகாத்மா காந்தி.
இந்தியா என்ற தேசத்தை ஒருங்கிணைத்தவர் அவரே, நாட்டின் வளர்ச்சி என்ற ஒரு நோக்கத்தில் அவர் செயல்பட்டார். தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தமிழகத்தை பொறுத்தவரையில் 51 சதவீதம் குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர் மற்ற மாநிலங்களைவிட ஏன் இந்திய கல்வி விகிதத்தை விட இது அதிகம், இதை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும், தமிழ்நாட்டில் 24 சதவீதம் தலித் மக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் 13 முதல் 14 சதவீதம் குழந்தைகளே பள்ளிக்கு செல்கின்றனர். சில சமூகத்தினர் மட்டுமே 70 முதல் 75 சதவீதம் அளவிற்கு கல்வி பெற்றுள்ளனர் என பேசியிருந்தார்.
இதையும் படியுங்கள்: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் ப்ரொபஷனலாக எதுவும் இல்லை..! அரசியல் வேண்டுமானால் செய்யலாம்..! அன்புமணி
அவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்த, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ஆளுநர் தமிழ்நாட்டின் கல்வி வீதம் குறித்தும், பட்டியலின மக்களின் கல்வி விதம் குறித்தும் தவறான தகவல்களை கூறியுள்ளார், தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவர்களின் கல்வி விகிதம் 39.6 சதவீதம் இந்தியாவில் மொத்த சராசரியை விட இது இரு மடங்கு ஆகும், தமிழகத்தில் கல்வி விகிதம் என்பது 51.4 சதவீதமாக உள்ளது, அதே போல தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவர்களின் கல்வி விகிதம் ஆளுநர் கூறுவது போல 13% முதல் 14% அல்ல 39.6 சதவீதம் என கூறியிருந்தார்.
இதேபோல ஆளுநரின் இந்த தகவலுக்கு பதில் அளிக்கும் வகையில் செய்தி வெளியிட்ட இந்து ஆங்கில நாளேடு, தமிழக ஆளுநர் கூறுவதுபோல தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் கல்வி விகிதம் 13 முதல் 14 சதவீதம் அல்ல 39.6% என செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அந்த செய்தியை மேற்கோள் காட்டி திமுக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மருத்துவர் எழிலன்.
இதையும் படியுங்கள்: ஊர்ந்து சென்று பதவி பெற்று நம்பிக்கை துரோகம் செய்தது யார்..? இபிஎஸ்யை இறங்கி அடித்த ஓபிஎஸ்
நேற்று சட்டமன்றத்தில் உரையாற்றினார். அப்போது ஆளுநரின் பேச்சு குறித்து அவர் சரமாரியாக விமர்சித்தார், மருத்துவர் எழிலன் கூறியதாவது, தமிழ்நாட்டில் நியமன தலைமைகள் தரவுகளை தவறாக வெளியில் சொல்கிறார்கள், தமிழ்நாட்டில் கல்வி விகிதாச்சாரம் 51.7 சதவீதம். அதில் பட்டியலின மக்களின் கல்வி விகிதாச்சாரம் என்பது 39.6 சதவீதம், ஆனால் நியமன தலைமைகள் வேண்டுமென்றே அரசியல் செய்வதற்காக தரவுகளை தவறாக சொல்வதை நாம் எப்படி பார்க்க வேண்டும் என்றால் சட்ட முன் வடிவுகள் அனைத்தையும் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்ற அச்சத்தை இந்நிலை உருவாகியிருக்கிறது.
தமிழ்நாட்டு அரசின் நான் முதல்வர் திட்டம் உள்ளது. நான் முதல்வர் திட்டத்தின் அடிப்படை என்னவென்றால் பரத் லால் என்பவர், ஒரு நிறுவனத்தை நடத்துகிறார், அவர் நேர்காணல் நடத்துகிறார், அப்போது பிடெக், இன்ஜினியர் மாணவர்கள் வருகிறார்கள், அனைத்து மாணவர்களும் ஐபிஎம் கிளவுட் படித்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள், எங்கே படித்தீர்கள் என்று அவர் கேட்கிறார், அனைத்து மாணவர்களும் சொல்கிறார்கள் எங்கள் தமிழ்நாட்டு முதல்வர் திறந்து வைத்த நான் முதல்வன் திட்டத்தின் மூலம் நாங்கள் ஐபிஎம் கிளவுட் படித்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.
தொழில் முதலீடுகளை பொருத்தவரையில் 197 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 2 லட்சத்தி 2.4 கோடி வருவாயைக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த 18 மாத காலத்தில் அடிப்படைக் கல்வி, சுகாதாரம், கட்டமைப்பு, இளநிலை பள்ளி, முதுநிலை பள்ளி, திறன் மேம்பாடு கொடுத்து, அனைத்து நபர்களையும் வரி செலுத்தும் முனைவோராக உயர்த்துகிறோம், ஆனால் வரி எங்கே செல்கிறது என்பதுதான் எனது கேள்வி. நம் வரிகளை பெற்றுக்கொண்டு ஒன்றிய அரசால் நிர்வகிக்கப்படும் மத்திய நிறுவனங்களில் வெறும் ஹிந்தி என்றால் அதற்கான மாநில உரிமையையும் கேட்பது திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.