ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் ப்ரொபஷனலாக எதுவும் இல்லை..! அரசியல் வேண்டுமானால் செய்யலாம்..! அன்புமணி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பு தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம், அறிக்கை ப்ரொபஷனல் ஆக இல்லை , நுட்பமான விளக்கம் எதுவும் அதில் இல்லையென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

Anbumani said that there is nothing in the Arumugasamy commission report

ஆறுமுகசாமி அறிக்கை- அரசியல் செய்யலாம்

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவருக்கு கட்சி தொண்டர்கள் பலர் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்,  சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை ப்ரொபஷனல் ஆக இல்லை அதனை வைத்து அரசியல் செய்யலாம் ஆனால் சட்டமன்றத்திற்குள் எடுபடாது என அவர் தெரிவித்தார். மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.காவல்துறையினர் இதனை பாடமாக வைத்துக் கொண்டு கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார். 

ஸ்டாலினை சந்தித்து பேசியதை இபிஎஸ் நிருபிக்க தயாரா?அரசியலை விட்டு விலக நான் தயார்.! நீங்கள் தயாரா? ஓபிஎஸ் சவால்

 கல்விக்கு இலக்கு வைக்க வேண்டும்

சட்டசபையில் அதிமுகவின் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை பிரச்னை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், இது கட்சி சார்ந்த பிரச்சினை மேலும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை வைத்து  அதன் அடிப்படையில் சபாநாயகர் நடுநிலையாக செயல்பட வேண்டும் என பதிலளித்தார். தீபாவளி பண்டிகைக்கு தமிழக அரசு மதுக்கடைகளுக்கு இலக்கு வைத்து விற்பனை செய்வதை விட மாணவர்கள், குழந்தைகளுக்கான கல்வி, தடுப்பூசி ஆகியவற்றுக்கு இலக்கு வைத்து செயல்பட்டால் நன்றாக இருக்கும் என கூறினார்.கோவை மாவட்ட பாமக செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தற்போது ஒரு அரசு பள்ளி அறையை பாமக மாடல் பள்ளி அறையாக மாற்றியுள்ளார். அதனை தமிழக முதல்வரும் பள்ளிகல்வித்துறையும் பின் பற்றி அரசு பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

'நீங்களும் சரியில்லை டாக்டர்'... மருத்துவமனையில் இருமியபடி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios