தலித் மக்களுக்கு எதிரான தீண்டாமை கோவில்களில் பள்ளிக் கூடங்களில் தொடர்கிறது.. கொந்தளித்த ஆளுநர் ஆர்.என் ரவி.
இன்னும் பல இடங்களில், பல பள்ளிக்கூடங்களில், கோவில்களில் ஹரிஜன மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை உள்ளது என தமிழக ஆளுநர் யார் என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் பல இடங்களில், பல பள்ளிக்கூடங்களில், கோவில்களில் ஹரிஜன மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை உள்ளது என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். ஏன் இந்த கொடுமை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளதுடன், தீண்டாமைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் வந்தும் அக்கொடுமை நிகழ்த்தும் பலர் இன்னும் இங்கு உள்ளனர் என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரிஜன பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை சகித்துக்கொள்ள முடியவில்லை என்றும் ஆளுநர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : இல்லாத மொழிக்கு 53 வாத்தியார்..? தமிழுக்கு 0..!! தமிழக கேந்திர வித்யாலயா பள்ளியில் ஓரவஞ்சனை..??
நாட்டின் 75வது சுதந்திர தின விழா மற்றும் ஹரிஜன் சேவா சங்கத்தின் 90 ஆண்டு விழா சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய விவரம் பின்வருமாறு:- பிரிட்டிஷ்காரர்கள் நம் நாட்டை மதம், இனம், மொழி என பிரித்தார்கள். அவர்களை எதிர்த்துப் போராடிய மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்டதுதான் அரிஜன சங்கம். அதன் விழாவில் இன்று நாம் பங்கேற்று இருக்கிறோம். மகாத்மா காந்தி ஒருவர் மட்டுமே இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்தினார், நாட்டை ஒரு குடும்பம் ஆக்கினார். அடித்தட்டு மக்களுக்கான வளர்ச்சியை கொண்டுவருவதில் அவர் குறியாக இருந்தார்.
இதையும் படியுங்கள் : அடி தூள்.. ஒரு வார காலத்தில் மகளீர் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் ரத்து.. அமைச்சர் ஐ. பெ அதிரடி சரவெடி.
காந்தியின் மறைவுக்குப் பின்னர் வசதி படைத்தவர்களுக்கே எல்லாம் என்ற நிலை உருவானது. கல்வி தொழில்நுட்பம் உட்கட்டமைப்பு என எல்லாவற்றிலும் தமிழகம் முன்னிலையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேசிய அளவில் gross enrollment ratio-வை கணக்கிட்டால் 6 - 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 28 சதவீதம் மட்டுமே பள்ளிக்கு செல்கின்றனர். மற்றவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை, ஆனால் தமிழகத்தில் 51 சதவீதம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். இதை எண்ணி நாம் பெருமை கொள்ள வேண்டும். இன்னும் இதை உற்றுக் கவனித்தால் அரிஜன குழந்தைகளில் வெறும் 13-14 சதவீத குழந்தைகளே பள்ளிக்கு செல்கின்றனர்.
ஆனால் தமிழகத்தில் 24 சதவீத அரிஜன மக்கள் வசிக்கின்றனர். ஆனால் சில சமூகத்தினர் மட்டுமே 70-75 சதவீதம் அளவிற்கு கல்வி வளர்ச்சி பெறுகின்றனர். இந்த சதவீதத்திற்கான இடைவெளியை தான் நாம் பார்க்க வேண்டும். இன்னும் பல இடங்களில், பல கோவில்களில், பல பள்ளிகளில், அரிஜன மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை உள்ளது. ஏன் இந்த கொடுமை? தீண்டாமை கொடுமை நடத்துபவர்கள் இன்னும் இங்கு உள்ளனர். தீண்டாமை கடைப்பிடிப்பதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தும் அது தொடர்கிறது, ஹரிஜன பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சகித்துக்கொள்ள முடியாதது.
ஹரிஜன மக்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் அதிகம், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் 86% பேர் தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார்கள். ஹரிஜன மக்கள் நம் மக்கள், அவர்களின் நிலை உயர நாம் உறுதியேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.