இஞ்சி சொல்லும் இனிய செய்தி..!! ஆண்களுக்கு இனிக்கும் பாலியல் வாழ்கை..!!
பல்வேறு உணவுகளில் வகைகளில் சேர்க்கப்படும் இஞ்சியில் அதிகளவில் காரத்தன்மை இருக்கும். இனிப்பான உணவுகளுக்கும் காரமிகுந்த உணவுகளுக்கு இது அழகாக பொருந்திப் போகும். நமது சமயலறைகளில் இதற்கு ஓரமாகவே இடம் ஒதுக்கப்படும். ஆனால் இதனுடைய நன்மைகள் எண்ணிலாடங்காதவை. எடை குறைப்பு, சளி, காய்ச்சல் உட்பட எண்ணற்ற நோய்களை இது ஓட ஓட விரட்டும். ஆனால் இது பாலியல் வாழ்க்கைக்கும் அருமருந்தமாக செயல்படுகிறது. இது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆண்களின் பாலியல் வாழ்க்கை சிறப்பாக அமைய, இஞ்சியின் முக்கிய பங்காற்றுகிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆற்றல் தரும் பண்புகள்
தலையில் இருந்து பாதம் வரை பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு மருந்தாக செயல்படுகிறது இஞ்சி. அந்த வகையில் ஆண்களுக்கு பாலியல் வாழ்க்கையில் இருக்கும் பிரச்னைகளை களையவும் இது உதவுகிறது. நீண்ட நேரம் பாலியல் உறவில் நீடித்திருக்கவும், தொடர்ந்து ஆண்களின் பாலியல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இஞ்சி துணைபுரிகிறது. இதுதவிர ஆண்கள் தங்களை ஆற்றலுடனும் இளைமையுடனும் வைத்திருக்க இஞ்சி பெரும் பங்காற்றுகிறது.
ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகள்
இஞ்சிக்கு ஒவ்வாமை பிரச்னைகளை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. உடலில் தசைப் பிடிப்பு காரணமாக ஏற்படும் வேதனைகளை போக்க இது பெரிதும் உதவுகிறது. அதனால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யக்கூடிய நபர்கள், தங்களுடைய தினசரி உணவில் இதை சேர்த்துக் கொண்டு வருவது நல்ல பலனை தரும். தொடர்ந்து நம்முடைய உணவுகளில் இஞ்சியை சேர்த்து வருவதால், எதிர்ப்பு சக்தியும் கூடும். ஒருவேளை உணவுகளில் இஞ்சி சேர்க்க முடியாது என்றால், தினசரி குடிக்கும் தேநீரில் இஞ்சிச் சாறு கலந்து குடிப்பதும் நல்ல பலனை தரும்.
சக்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்
இஞ்சியை தொடர்ந்து சாப்பிடுவதால், உடலில் ரத்தச் சக்கரையின் அளவுக்கு கட்டுக்குள் இருக்கும். இது நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமில்லாமல், எதிர்காலத்தில் சக்கரை நோய் வருவதற்கான வாய்ப்புள்ளவர்களும் இஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். மேலும் இருதயம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், உடலுக்கு பல்வேறு வகையில் வலுவை கூட்டவும் இஞ்சி பெரிதும் பயன்படுகிறது.
அதிக பாலியல் இச்சை கொண்ட பெண்களை எப்படி சமாளிக்கலாம்..? ஆண்களே தவறாமல் படிங்க..!!
மூட்டு வலியை அண்டவிடாது
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்னை மூட்டு வலி. உங்களுடைய மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வேதனை இஞ்சி சாப்பிட்டு வரவர குறையும். ஏற்கனவே இதில் வலியை குறைக்கும் பண்புகள் இருப்பதால் வாத பிரச்னை எதுவும் ஏற்படாது. அலோபத்தி மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் முடக்கு வாதம் உள்ளிட்ட மூட்டு சார்ந்த பிரச்னைகளுக்கு இஞ்சியில் தான் மருத்துகள் தயாரிக்கப்படுகின்றன.
உங்கள் கணவரிடம் ‘அந்த’ படம் பார்க்கும் பிரச்னையுள்ளதா..?? அப்போ இதப்படிங்க..!!
எடை குறைப்பு
பல்வேறு பத்திய முறைகளை பின்பற்றினாலும் ஒரு சிலருக்கு எடை குறைவது என்பது பெரும் பிரச்னை தான். அப்படிப்பட்டவர்களுக்கு கூட இஞ்சி நல்ல பலனை தருகிறது. தினசரி குடிக்கும் தேநீர், குடிநீர் மற்றும் உணவுகளில் இஞ்சியை சேர்த்து வருவதன் மூலம் உடலில் சேர்ந்துள்ள கொழுப்பு கரைந்து, உடல் எடையும் குறைந்து விடுகிறது. பல்வேறு மூலிகை குணம் கொண்ட இஞ்சியின் மூலம் குடற்புண்களை நீக்குதல், செரிமான பிரச்னையை சரிசெய்தல் மற்றும் தூக்கமின்மை பிரச்னை விரட்டுதல் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கின்றன.