இல்லாத மொழிக்கு 53 வாத்தியார்..? தமிழுக்கு 0..!! தமிழக கேந்திர வித்யாலயா பள்ளியில் ஓரவஞ்சனை..??
தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 109 இந்தி ஆசிரியர்களும், 53 சமஸ்கிருத ஆசிரியர்களும் உள்ள நிலையில், தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளி
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளியானது இயங்கி வருகிறது. மத்திய அரசு ஊழியர்கள் இராணுவம் மற்றும் துணை இராணுவத்தினர்கள் பணி நிமித்தமாக ஒவ்வொரு இடத்திற்கும் இடம்மாறி சென்றுகொண்டே இருப்பார்கள். அப்படி இடம்மாறி செல்லும்போது அவர்களுடைய பிள்ளைகளின் படிப்பில் எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகள். இந்த பள்ளியில் குறைவான கட்டணம் இருப்பதன் காரணமாகவும் படிப்பு நன்றாக கற்றுக்கொடுப்பதனால் ஏராளாமானோர் தங்களது பிள்ளைகளை கேந்திர வித்யாலயா பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டுவார்கள். கேந்திர வித்யாலயா பள்ளியில் பயிற்று மொழியாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளது. தவிர அந்த மாநிலத்தில் உள்ள பிராந்திய மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதில் குறைந்தபட்ச மாணவர்கள் இருக்கும்போதுதான் மொழிவழி பாடம் கற்றுக் கொடுக்கப்படும்.
தமிழக்கு வாத்தியார்-0
நாடு முழுவதும் மொத்தம் ஆயிரத்து 245 பள்ளிகளும், வெளிநாட்டில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. தமிழகத்தில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில் 14லட்சத்து 35ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் தமிழக கல்வியாளர்களை மட்டுமில்லாமல் பெற்றோர்களையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 109 இந்தி ஆசிரியர்களும், 53 சமஸ்கிருத ஆசிரியர்களும் உள்ள நிலையில், தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை.. 34 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை..
தமிழ் மொழியை படிக்க முடியாது
மேலும் தமிழ் மொழித் தேர்வில் தேர்சி பெறாமல் 6ஆம் வகுப்பில் இருந்து அடுத்த வகுப்புக்குச் செல்ல முடியுமா? என்ற கேள்விக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது’தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத மொழி பாடத்திற்குப் பதிலாக தமிழைப் பாடமாகப் பயில முடியுமா? என்ற கேள்விக்கு முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவல் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்