குடியரசுத் தலைவராக வாய்ப்பு வந்தும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்.
யார் என்ன சொன்னாலும் நான் தமிழ்நாட்டு அரசியலில் மூக்கு, தலை, வால் என அனைத்தையும் நுழைப்பேன் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
யார் என்ன சொன்னாலும் நான் தமிழ்நாட்டு அரசியலில் மூக்கு, தலை, வால் என அனைத்தையும் நுழைப்பேன் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். எப்போதும் மக்களோடு மக்களாக இருக்க வேண்டுமென்பதால் குடியரசுத் தலைவர் வேட்பாளராக வாய்ப்பை கூட தான் பயன்படுத்தவில்லை என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநராக தனது மூன்றாம் ஆண்டு பயண அனுபவம் குறித்து எழுதிய Re Rediscovering self in selfless service தினம் புத்தக வெளியீட்டு விழா சென்னை லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது. அதில் தமிழிசை சௌந்தராஜன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசிய விவரம் பின்வருமாறு:- எப்போதும் இயல்பாக மக்களோடு மக்களாக இருக்கும் வாழ்க்கை தான் எனக்கு பிடிக்கும், என் அப்பா தேசிய கட்சியில் இருந்தாலும் அதற்கு நேர்மாறன தேசிய கட்சியின் தலைவராக இருந்தது தமிழ் நாட்டுக்கு செய்த கடமையாக நினைக்கிறேன்.
இதையும் படியுங்கள்: பொதுமேடையில் அரசியல் நோக்கத்திற்காக தவறான தகவல்களை கூறுகிறார் ஆளுநர்.. சட்டசபையில் கொந்தளித்த Dr.எழிலன்.
நான் ஆளுநராக இருக்கும் மாநிலங்களில் ஆட்சிக்கு இடையூறு செய்வது இல்லை, ஆனால் நான் இடையூறு செய்வதாக சிலர் என்னை நினைக்கிறார்கள், குடியரசு தினத்தில் என்னை கொடியேற்றகூட விடவில்லை, ஆளுநர் உரையாற்ற கூட அனுமதிக்கவில்லை, தெலுங்கானா புதுச்சேரியில் முழுமையாக பணியாற்றுகிறேன், தமிழகத்தின் மீது அன்புடன் இருக்கிறேன். நான் மருத்துவராக இருந்த போது பார்ப்பவர்கள் அஞ்சும் வகையில் இருப்பேன். நடிகர் ரஜினிகாந்தின் 16 வயதினிலே படத்தில் வரும் பரட்டை என என்னை அழைப்பார்கள், ஆனால் அந்த பரட்டை தலை முடி தான் எனக்கு பலம் ஆகிவிட்டது.
இதையும் படியுங்கள்: லட்சுமியை வழிபடாத முஸ்லிம்.. பணக்காரர் ஆகலயா.?? பாஜக எம்எல்ஏ நக்கல் பேச்சு.. உருவபொம்மை எரிப்பு.
வெள்ள பாதிப்பு பகுதிக்கு தெலுங்கானா முதல்வரையே வரவைத்த பெருமை எனக்கு உள்ளது, நான் அங்கு செல்ல போகிறேன் என்று அறிந்தவுடன்தான் அவர் அங்கு சென்றார், அரசியல் நாகரீகம் இருக்க வேண்டும், எத்தனை தாக்குதல்கள் என்மீது தெடுத்தாலும் உளியில் அடி வாங்கிய சிலைபோல நான் மாறுவேன். ஆளுநராக எனக்கு அதிகாரம் இருந்தாலும், தனி விமானத்தில் நான் பயணிப்பதில்லை. யார் என்ன சொன்னாலும் தமிழ்நாட்டில் நான் மூக்கை மட்டுமல்ல தலையையும் நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன், தமிழ்நாட்டில் காலும் வைப்பேன்.
ஆளுநர் கருத்து சொல்வதை சட்டம் தடுக்காது, தமிழ்நாட்டில் தவறு நடந்தால் அதை கண்டித்து நான் கருத்துச் சொல்வேன்,எனக்கு குடியரசுத் தலைவர் வேட்பாளராக வாய்ப்பு வந்தது, ஆனால் மக்களோடு மக்களாகத்தான் இருப்பேன் என்று நான் கூறி விட்டேன், நான் பிரபலமான பெரிய மருத்துவராக இருந்த நான் எனது வருமானத்தை கூட விட்டு, இப்போது நான் ஆளுநராக இருப்பது மக்களுக்காகத்தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.