தமிழக பள்ளிகளில் ஹைடெக் கல்வி! மைக்ரோசாப்ட் TEALS ஒப்பந்தம்! அமைச்சர் மகேஷை புகழ்ந்து தள்ளிய முதல்வர்!

13 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 3800 மாணவர்கள் பயன்பெறும் வகையில் TEALS திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறியுள்ளார்.

Tamilnadu Government signs new MOU with Microsoft to upgrade village school classrooms

கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் உலகத்தர தொழில்நுட்பக் கல்வி வழங்குவதற்காக புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் இட்டிருக்கிறது. இதற்காக அத்துறையின் அமைச்சர் மகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக கல்வித்துறைக்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அமைச்சர் மகேஷ் தன்னை போனில் தொடர்புகொண்டு இதைத் தெரிவித்ததாக முதல்வர்  மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமெரிக்கப் பயணத்தின்போது, ஊரகப் பகுதி மாணவர்களுக்கு உலகத்தரத்திலான தொழில்நுட்பக் கல்வி அறிமுகத்தை வழங்க மைக்ரோசாப்ட் உடன் இணைந்து தமிழ்நாடு கல்வித்துறை மேம்பாட்டிற்காக மேற்கொள்ளும் முன்முயற்சிகளைப் பற்றி என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

தமிழர்களின் இதயத்துடிப்பான கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்துவதே நமது திராவிட மாடல் அரசின் இலக்கு. அதற்கான பணிகளில் ஈடுபடும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுகள்! கல்வியிற் சிறந்த தமிழரெனப் பார் போற்ற பாடுபடுவோம்!" எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது அணை பற்றி முக்கிய அறிவிப்பு! சித்தராமையா கொடுத்த வாக்குறுதி!

Tamilnadu Government signs new MOU with Microsoft to upgrade village school classrooms

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"TEALS (Tecnical Education And Learning Support) எனும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாட்டின் கிராம பகுதிகளைச் சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கு அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த புரிதலும் சென்றடைய TEALS திட்டம் செயல்படுத்தப்படும்.

முதலமைச்சர் ஸ்டாலின் வானவில் மன்றம் திட்டத்தின் வாயிலாக STEM முயற்சியை தொடங்கி வைத்தார்கள். மாணவர்களின் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிக்கும் விதமாக 710 கருத்தாளர்களின் உதவியோடு மாணவர்களின் அறிவியல் திறன்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. இதன் அடுத்த கட்டமாக Robotics, Artificial Intelligence, Machine learning போன்ற தொழில்நுட்பங்கள் நமது கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் நோக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tamilnadu Government signs new MOU with Microsoft to upgrade village school classrooms

பலத்த போட்டிக்கு மத்தியில்: TEALS எனும் திட்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து தங்கள் மாநிலங்களில் செயல்படுத்த வேண்டுமென இந்தியாவில் உள்ள பல மாநிலங்களும் போட்டியிட்டன. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தந்த ஆக்கத்தினாலும், ஊக்கத்தினாலும் தமிழ்நாடு மாநிலம் முதன்முறையாக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

நவீன தமிழ்நாட்டின் தந்தை கருணாநிதி நூற்றாண்டு விழாவில் இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தமிழர்களாகிய நமக்கு கிடைத்த பெருமையாகும். முதல்கட்டமாக 13 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 3800 மாணவர்கள் பயன்பெறும் வகையில் TEALS திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

மிக விரைவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மைக்ரோசாப்ட் இயக்குனர்கள் பங்குபெறும் TEALS திட்டத் தொடக்க விழா தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இத்திட்டம் அனைவராலும் பாராட்டப்படும் என மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இதற்கு உறுதுணையாக விளங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சிசில் சுந்தர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்." எனத் தெரிவித்தார்.

சந்திரயான் 3 விண்ணில் பாயும்போது நேரில் பார்க்கணுமா? மிஸ் பண்ணாம இப்பவே அப்ளை பண்ணுங்க!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios